கிராம உதவியாளரின் பணி என்பது என்ன ?
கிராம உதவியாளரின் முக்கியப் பணிகள் என்பது கிராம நிர்வாக அலுவலருக்கு உதவுவது , நிலவரி மற்றும் பிற அரசு வரிகளை வசூலிப்பது , நில அளவீடு , பட்டா மாற்றம் , மற்றும் அரசு நிலங்கள் தொடர்பான பதிவுகளை பராமரித்தல் , கிராம கணக்குகளைப் பராமரிப்பது , பயிர் கணக்கெடுப்பு நடத்துவது , பிறப்பு , இறப்பு போன்ற பதிவேடுகளைப் பராமரிப்பது , மக்கள் தொகை மற்றும் தேர்தல் தொடர்பான கணக்கெடுப்புகளை மேற்கொள்வது , மற்றும் அரசு சான்றிதழ்கள் வழங்குவதற்காக உள்ளூர் தகவல்களைச் சேகரித்து அறிக்கை அளிப்பது , நிலவரி , வீட்டு வரி , மற்றும் அபிவிருத்தி வரி போன்ற பல்வேறு அரசு வரிகளை வசூலித்தல் , சாதி , வருமானம், இருப்பிடம், பிறப்பு, இறப்பு, மற்றும் சொத்து மதிப்பு போன்ற சான்றிதழ்கள் வழங்குவதற்கான தகவல்களை சேகரித்து அறிக்கை அளித்தல் ஆகியவை ஆகும்.
3 ஆண்டுகளாக காலி பணியிடங்கள்
வருவாய் துறை பணிகளில் மக்கள் முதலில் கிராம நிர்வாக அலுவலர்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு உதவ ஒரு கிராமத்துக்கு ஒன்று அல்லது இரண்டு கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் , தமிழகம் முழுதும் காலியாக உள்ள , 2, 299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வருவாய் துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் , வருவாய் துறை உயரதிகாரிகள் தேர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர், அந்தந்த கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். எனவே தாசில்தார் வாயிலாக இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
வயது வரப்பில் தளர்வு
பொதுப் பிரிவினருக்கு 30 ம், இதர பிரிவினருக்கு 35 ம் வயது வரம்பாக அறிவிக்கப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு மட்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருவாய் துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் ,
கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையில் , கிராம உதவியாளர்கள் தேர்வில் , அனைத்து பிரிவினருக்கும் தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கலாம். அதாவது , பொதுப் பிரிவினருக்கு 32 , பி.சி., எம்.பி.சி - டி. என். சி., பிரிவினருக்கு 39 , எஸ்.சி., - எஸ்.டி. வகுப்பினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 42 ஆண்டுகள் என, வயது வரம்பை கடைப் பிடிக்க வேண்டும் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.