IOC-இல் 187 காலிப்பணியிடங்கள்.. பொறியியல் பட்டதாரிகள் பிப்.18-க்குள் உடனடியாக விண்ணப்பிக்கவும்..
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பைப்லைன் பிரிவில் 187 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்தியன் ஆயில் என்று அறியப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் கடந்த 2020- 21 ஆம் நிதியாண்டில் 7,21,762 கோடி வரை நிகர லாபத்தைக்கொண்டிருந்தாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய மிகப்பெரிய நிறுவனமாக இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பைப்லைன் பிரிவில் 187 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணியிடங்களுக்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
இந்தியன் ஆயில் நிறுவனப் பணிக்கானத் தகுதிகள்:
பணி: Engineering Assistant (Mechanical, Electrical, T&I, Operation,) Grade - IV
காலிப்பணியிடங்கள் - 137
கல்வித்தகுதி :
இந்தியன் ஆயில் நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமென்டேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன், ரேடியோ கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், கெமிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்திய ஆயில் நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.01.2022 தேதியின் படி 18 வயது முதல் 26 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ. 25,000 – 1,05,000 என நிர்ணயம்.
Technical Attendant – 1 Grade- I பணிக்கானத் தகுதிகள்
கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக். இன்டூஸ்ரியல் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : மாதம் ரூபாய் 23,000 – 78,000 என நிர்ணயம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://plapps.indianoil.in/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் வருகின்ற பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/f208970689d44356aa9b0028ced1d5cb.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.