மேலும் அறிய

Diabetes Awareness Campaign | உலக நீரிழிவு நோய் தினம், கொண்டாடப்படுதலின் காரணமும், முக்கியத்துவமும்..

நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ல்ஸ் பெஸ்ட் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட்  ஆகியோருடன் இணைந்து 1922 இல் ஃப்ரெட்ரிக் பான்டிங் என்பவர் கண்டுபிடித்தார்.

உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோய்க்குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், இது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான சிகிச்சை, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டைப்1 நீரிழிவு நோயைத் தடுக்க முடியாது மற்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இன்சுலின் ஊசி மூலம் இந்த வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கலாம், சிகிச்சையின் மூலம் இயல்பான வாழ்க்கையைத் தொடர  முடியும். 

2020 ஆம் ஆண்டின் உலக நீரிழிவு தினத்திற்கான தீம், 'உலக நீரிழிவு தினம்: செவிலியர்கள் மாற்றத்தை உருவாக்குகிறார்கள்' என்பதே. 2020 ஆம் ஆண்டில் உலக நீரிழிவு தின பிரச்சாரம், நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் செவிலியர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தியது. செவிலியர்கள் பொதுவாக நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள். அவர்கள் நோயாளிகளுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குதன் மூலமும், சிறந்த கவனிப்பை வழங்குவதன் மூலமும் நோயை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.

வரலாறு

நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ல்ஸ் பெஸ்ட் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட்  ஆகியோருடன் இணைந்து 1922 இல் ஃப்ரெட்ரிக் பான்டிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே  நவம்பர் 14ஆம் தேதி நீரிழிவு நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது.  ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையத்தை அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 

Diabetes Awareness Campaign | உலக நீரிழிவு நோய் தினம், கொண்டாடப்படுதலின் காரணமும், முக்கியத்துவமும்..

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் பெருமளவில் அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தது. நீரிழிவு நோயாளிகளின் உடல் மற்றும் மன நலன்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நோய்க்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நோயாளிகளுக்கு உயிர்க்காக்கும் மருந்துகளை உருவாக்குவதற்கான நிதியைத் திரட்டுதல் போன்றவை இந்த நாளின் மையமாக உள்ளது. 
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு உடலால் ரத்தத்திலிருந்து சர்க்கரையை உடல் செல்களுக்கு அனுப்ப முடிவதில்லை என்பதையே காட்டுகிறது. இந்நிலை கண்டுக் கொள்ளப்படாமல் விடப்படும்போது அது நீரிழிவு நோயாக மாறுகிறது. இந்த டெக்னாலஜி யுகத்தில் உடற்பயிற்சிகள் இல்லாதது நீரிழிவு நோய்க்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. இயற்கை முறையில், மருந்துகள் இல்லாமலேயே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க முடியும். அவை என்னவெனப் பார்க்கலாம்.

 உடற்பயிற்சி: ரெகுலரான உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் போது தசை அசைவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோய் வராமல் தடுக்க சில எளிய உடற்பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், நடனம், சைக்ளிங் போன்றவை உதவும்.

Diabetes Awareness Campaign | உலக நீரிழிவு நோய் தினம், கொண்டாடப்படுதலின் காரணமும், முக்கியத்துவமும்..

கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்தல்: அதிகளவிலான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்ககூடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. 

உடல் எடையை சீராக வைத்தல்: ஆரோக்கியமான உடல் எடை, நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது. மற்றும் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலை சுறுசுறுப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் வைக்கிறது. 

நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்: காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகிய நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து கார்போஹைட்ரேட்டுகளின் சர்க்கரை செரிமானத்தையும் சர்க்கரையை உறிஞ்சுவதையும் மெதுவாக்குகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைத்தல்: மன அழுத்தம் உடலில், குளுகோகன் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே வழக்கமான உடல் பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

போதுமான தண்ணீர் குடிப்பது: தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் டிஹைட்ரேட் ஏற்படாமல் (நீரிழப்பு) தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டின் மூலம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றுவதை ஊக்குவிக்கிறது.

போதுமான தூக்கம்: எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குவது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஒழுங்கற்ற தூக்கப் பழக்கம் கார்டிசோலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

குரோமியம், மெக்னீசியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது : குரோமியம் மற்றும் மெக்னீசியம் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே, இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆப்பிள் சைடர் வினிகர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக அறியப்படுகிறது மற்றும் இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டுமே நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைத் தடுக்கின்றன.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget