World Cancer Awarness Day : புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன..? வராமல் தடுப்பது எப்படி..?
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 7-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் குறித்து நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நவம்பர் 7-ந் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஆகும். உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் குறித்து நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றியும் விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது பற்றியும் பார்ப்போம்.
புற்றுநோய் என்றால் என்ன?
புற்றுநோய் (கேன்சர்) என்பது உடலின் செல்கள் மற்றும் திசுக்களை பாதிக்கும் ஒரு நோயாக கருதப்படுகிறது. புற்றுநோய் உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கக் கூடும். ஆனால் பொதுவாக நுரையீரல் அல்லது செரிமான அமைப்பில் புற்றுநோய் பாதிப்பு உண்டாகிறது.
மார்பகம், இரத்தம், தோல், மூளை, எலும்பு, கணையம், கல்லீரல், கருப்பை வாய், கருப்பைகள், சிறுநீர்ப்பை, தைராய்டு சுரப்பி, நிணநீர் கணுக்கள், சிறுநீரகம், கண்கள், மூக்கு உள்ளிட்ட உடலின் மற்ற பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. வாயிலும் புற்றுநோய் ஏற்படக்கூடும். புற்றுநோய் பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் உயிர்வாழ்வு விகிதம் அதிகரித்து வருகிறது.
புற்றுநோய்க்கான அறிகுறிகள்
இந்தியாவில் பொதுவாக நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகிய பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. புற்றுநோய் ஆரம்பத்தில் சிறிய கட்டிகளாக உருவாகி நாளடைவில் பரவி உயிரையே எடுத்து விடுகிறது.
விரை அல்லது டெஸ்டிகுலர் புற்றுநோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எவருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் ஏற்படலாம். முழுமையடையாத விரைப்பைகளுடன் பிறந்த ஆண்களுக்கு இந்நோய் பொதுவாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த டெஸ்டிகுலர் புற்றுநோயில் பொதுவாக ஒரு பக்க விரைப்பை வீக்கத்துடன் காணப்படும்.
மூச்சு விடுவதில் சிரமம், ரத்தம் கலந்த சளி வருவது, நீண்ட நாள் தொடர் இருமல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாக இருக்கின்றன. இதுதவிர, வயிற்றில் அசெளகரியம், வலியுடந் சிறுநீர் கழித்தல், குமட்டல், வாந்தி ஆகிய அறிகுறிகள் 2 வாரங்களுக்கு மேல் நீடித்தல், சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம், கழுத்தில் கட்டி, தோல் நிறத்தில் மாற்றம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, கைகளுக்கு கீழே கட்டிகள் ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். உங்கள் தோலில் புதிய மச்சம் இருப்பது தோல் புற்று நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
Summer Haircare Tips | கோடையில் அதிகரிக்கும் முடி உதிர்வு...என்னதான் தீர்வு?
புற்றநோய் வராமல் தடுப்பது எப்படி
குறிப்பாக புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது மற்றும் உடல் உழைப்பு இல்லாமை ஆகிய காரணங்களால் தான் புற்றுநோய் செல்கள் உருவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Risk of #Cancer can be reduced by adopting healthy lifestyle and taking preventive measures. #NationalCancerAwarenessDay#SwasthaBharat pic.twitter.com/Sr9kpx7L30
— Ministry of Health (@MoHFW_INDIA) November 6, 2022
அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்தல், உடற்பயிற்சிகள் செய்து தேக ஆரோக்கியத்துடன் இருத்தல், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுதல் போன்றவை மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )