மேலும் அறிய

Sleeping Pills : அடிக்கடி தூக்க மாத்திரை எடுத்துக்கொள்கிறீர்களா? : இதை முதல்ல நீங்க படிச்சே ஆகணும்..

நீங்கள் விழித்திருக்கும்போது உங்கள் கண்கள் செருகலாம் அல்லது நீங்கள் தூக்கத்தை உணரலாம்.

பல காரணங்களால் பலருக்கு நல்ல தூக்கம் வருவதில்லை. இது தூக்கமின்மை அல்லது பிற நோய்கள் காரணமாக இருக்கலாம். இதுமட்டுமின்றி, சிலருக்கு தூக்கம் கலைந்து, நடு இரவில் எழுந்து விடுகின்றனர். நல்ல தூக்கம் வர, இவர்களில் பலர் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.

மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநோய்களுக்கு தூக்க மாத்திரைகள் ஆண்டிடிப்ரஸன்ட்களாகவும் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை உங்களை தூங்க வைக்கும் அதே வேளையில், இந்த மாத்திரைகளை தினமும் உட்கொண்டால் கடுமையான பக்கவிளைவுகளும் உண்டு. நீங்களும் தூக்க மாத்திரைகளைச் சார்ந்து இருந்தால், இவற்றால் உங்கள் உடல் பாதிக்கப்படக்கூடிய எதிர்மறை விளைவுகளைப் பார்ப்போம்.

தூக்கமாத்திரையால் ஏற்படும் பக்க விளைவுகள் :
மயக்கம்

தூக்க மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்வதால், எப்போதும் மயக்கம் மற்றும் தூக்கம் வரலாம். இது மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உங்கள் தலையில் கனத்தை உணரச் செய்கிறது. நீங்கள் விழித்திருக்கும் போது உங்கள் கண்கள் செருகலாம் அல்லது நீங்கள் தூக்கத்தை உணரலாம்.

இயல்பான சுவாசத்தை பாதிக்கிறது

சுவாசக் கோளாறுகள் அல்லது நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. அவை இயல்பான சுவாசத்தை பாதிக்கும் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நாள்பட்ட நுரையீரல் நோய்கள் உள்ள நோயாளிகள் தூக்க மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வாமை 

தூக்க மாத்திரைகள் காரணமாக பலருக்கு சில தீவிர ஒவ்வாமை விளைவுகள் ஏற்படலாம். தூக்க மாத்திரையை உட்கொண்ட பிறகு தோல் வெடிப்பு, மார்பு வலி, குமட்டல், அரிப்பு மற்றும் பிற அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் நீங்கள் உங்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

சார்ந்திருக்கும் சூழலை ஏற்படுத்துகிறது

தூக்க மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் உடலின் இயல்பான செயல்பாடுகள் தடைபடுகின்றன. போதைப்பொருளைப் போலவே, தூக்க மாத்திரைகளையும் ஒருவர் சார்ந்து இருக்கும் சூழல் உருவாகிறது. உட்கொள்ளப்படாவிட்டால், அவை வித்ட்ராயல் எனப்படும் ஒருவித அறிகுறிகளை உண்டுபண்ணுகிறது மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது.

செறிவு இல்லாமை

தூக்க மாத்திரைகள் மூளையின் செயல்பாட்டை மெதுவாக்குகிறது, இது நினைவாற்றல் மற்றும் செறிவு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் விஷயங்களை மறக்க தொடங்குவீர்கள், மேலும் விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் போகும்.

இயற்கை வைத்தியம் மூலம் தூக்கக் கோளாறுகளை குணப்படுத்தவும், தூக்க மாத்திரைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் முயற்சிப்பதே இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீளுவதற்கான வழி.மேலும் தூக்க மாத்திரைகளை மருத்துவர்களின் தகுந்த பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்வது பரவலாக அதிகரித்து வருகிறது. அதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget