Skincare Alert: முகப்பரு, கரும்புள்ளிகள் அற்ற தோலை பராமரிக்க… மூன்று எளிய நல்ல பழக்கங்கள்!
மாஸ்குகள், ஹெல்மெட்கள், தொப்பிகள் போன்றவற்றை அணியும்போது வியர்ப்பது முகப்பருவை மோசமாக்கும் என்று கூறிய அவர், "வியர்வை வந்தவுடன் கூடிய விரைவில் உங்கள் முகத்தை கழுவவும்.
முகப்பரு மிகவும் பொதுவான தோல் பிரச்சினைகளில் ஒன்றாகும். குறிப்பாக உங்களுக்கு எண்ணெய் தன்மை அதிகம் கொண்ட சருமம் இருந்தால் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்களால் அடைக்கப்படும் துளைகளால் பிரேக்அவுட்கள், பருக்கள், வெள்ளை புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு வழிவகுக்கிறது. முகப்பருவை மறைப்பதாக கூறும் பல சிகிச்சைகள் இருந்தாலும், தோல் பராமரிப்பு நிபுணர்கள் ஒரு அடிப்படை முறையைப் பின்பற்றுவதன் மூலம் சருமத்தை முகப்பரு மற்றும் பருக்கள் இல்லாமல் செய்யலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
View this post on Instagram
லேசான முகப்பரு இருந்தால், நாட்பட்ட பிரச்சனை இல்லை என்றால் தோல் மருத்துவரான டாக்டர் ஜுஷ்யா சரின் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார். முகப்பருவை அழிக்க உதவும் மூன்று எளிய பழக்கங்களை அவர் பட்டியலிட்டார்.
- குறிப்பாக மாஸ்குகள், ஹெல்மெட்கள், தொப்பிகள் போன்றவற்றை அணியும்போது வியர்ப்பது முகப்பருவை மோசமாக்கும்.
- வியர்வை வந்தவுடன் கூடிய விரைவில் உங்கள் முகத்தை கழுவவும். துவைக்கும் துணி, கடற்பாசி, ஸ்க்ரப் ஆகியவற்றைப் பயன்படுத்துவது சருமத்தை எரிச்சலடையச் செய்து, முகப்பரு வெடிப்பைத் தூண்டும். உங்கள் முகத்தை சுத்தம் செய்ய, சிராய்ப்பு இல்லாத க்ளென்சரைப் பயன்படுத்தவும், மேலும் நம் விரல் நுனியை மட்டும் பயன்படுத்தலாம்.
- எண்ணெய் பசையுள்ள கூந்தல் இருந்தால், தினமும் ஒரு முறை அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறை என அடிக்கடி ஷாம்பு போட்டுக் கொள்ளுங்கள். இது உச்சந்தலையில் எண்ணெய் தேங்குவதையும், உங்கள் முக தோலை எண்ணெய் சென்று அடைப்பதையும் தடுக்கிறது
என்று டாக்டர் சரின் கூறினார்.
தொடர்ச்சியான முகப்பரு வருகிறதென்றால் அதற்கும் ஒரு வழியை சொல்கிறார் அவர். இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் சரின் முன்பு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார். மருத்துவ நிலைமைகள் மற்றும் மன அழுத்தம் உட்பட வயது வந்தோருக்கான முகப்பருக்கான ஏழு பொதுவான காரணங்களில், அடிக்கடி சுத்தப்படுத்துதல் மற்றும் தவறான அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.
View this post on Instagram
"நம்மில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு இரண்டு முறை மென்மையான க்ளென்சர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்" என்று டாக்டர் சரின் குறிப்பிட்டார். இருப்பினும், அதை விட அதிகமாக உங்கள் முகத்தை சுத்தம் செய்ய நேர்ந்தால், உங்கள் சருமம் சுத்தப்படுத்துவதால் ஏற்படும் வறட்சியை ஈடுசெய்ய அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும். இது உங்கள் சருமத்தை எரியச் செய்து, மீண்டும் முகப்பருவை ஏற்படுத்தும். எண்ணெய் அல்லது கலவையான சருமம் இருந்தால், எண்ணெய் இல்லாத, காமெடோஜெனிக் அல்லாத நீர் சார்ந்த தயாரிப்புகளை எப்போதும் பயன்படுத்தவும்," என்று அவர் பரிந்துரைத்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )