(Source: ECI/ABP News/ABP Majha)
Turnip: நூக்கல் பிடிக்காதா? தப்பு... நூக்கல் உணவுல சேர்த்தா இந்த அற்புதங்கள் நடக்கும்..!
உணவே மருந்து என்ற பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் நாம். ஆனாலும் நாம் எல்லா உணவுகளையும் அவ்வளவு எளிதாக சாப்பிட்டுவிடுவதில்லை. சிலவற்றை ஏதாவது ஒரு காரணம் சொல்லி புறந்தள்ளிவிடுகிறோம்.
உணவே மருந்து என்ற பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் நாம். ஆனாலும் நாம் எல்லா உணவுகளையும் அவ்வளவு எளிதாக சாப்பிட்டுவிடுவதில்லை. சிலவற்றை ஏதாவது ஒரு காரணம் சொல்லி புறந்தள்ளிவிடுகிறோம். அப்படி நாம் ஒதுக்கும் உணவுகளில் ஒன்று தான் டர்னிப் என்னும் நூக்கல்.
நூல்கோல் தமிழில் நூக்கல், நூற்கோல் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நூக்கலில் கலோரிகள் மிகமிகக் குறைவு. ஆனால் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் மிக அதிகம். வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. நூக்கோல் எனப்படும் இந்த காயை நாம் ஏன் உண்ண வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நூக்கல் வெளிர் பச்சை மற்றும் கருஊதா நிறங்களில் வளர்கிறது. இது கடினமான காய் என்பதால் இதை நன்றாக வேகவைத்துதான் உண்ண வேண்டும்.
இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்ஸ் அதிகம். மேலும் கால்சியம், ஃபோலேட், மக்னீஸியம் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. நூக்கலில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
நூக்கலில் உள்ள அதிகப்படியான விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது. நூக்கல் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு நல்லது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்
நூக்கல், காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்ற உணவு வகைகள் புற்றுநோய் ஏற்படுத்துவதைத் தடுக்கும். க்ரூசிஃபோரஸ் வகை காய்கறிகளில் டிண்டோலில்மீதேன், சல்ஃபோரேஃபேன் ஆகியன உள்ளன. இவை புற்றுநோய் சிகிச்சையில் பலன் தரும் வேதிப் பொருட்கள்.
குடல் நோய்களை சரி செய்யும்:
நார்ச்சத்து அதிகமுள்ளதால் இந்த காயை சாப்பிடுவதால் குடல் நோய்களைக் குணப்படுத்தும். டைவர்டிகுலிடிஸ் போன்ற நோய்களை சரி செய்வதில் நூக்கலுக்கு பெரிய பங்கிருக்கிறது. நூக்கல் குடலில் உள்ள தண்ணீரை உரிந்து குடல் சீராக இயங்க உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது:
நூக்கல் சாறு 45 மி.கிராம் உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதை உறுதி செய்ய 9 மாதங்களுக்கு எலிகளுக்கு 45 மி.கிராம் அளவுக்கு இந்த சாறை கொடுத்து வந்தனர். ஆரம்பத்தில் ஹை சுகர் டயட்டில் வைக்கப்பட்டிருந்ததால் சர்க்கரை அளவு கூடிய அந்த எலிகளுக்கு நூக்கல் சாறு கொடுக்கப்பட்டதில் அவற்றின் ரத்த சர்க்கரை அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது.
உடல் எடை மேலாண்மை:
கலோரிக்கள் குறைவு, மாவுச்சத்து குறைவு, மேலும் இதன் க்ளைசிமிக் இண்டக்ஸ் ஆகியன இருப்பதால் உடல் எடை மேலாண்மையில் நூக்கல் நல்ல பலன் தருகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )