‛டெல்டா அளவுக்கு ஓமைக்ரான் ஆபத்தானது இல்லை’ - பிரபல மருத்துவர் அந்தோனியோ ஃபாசி
ஓமைக்ரான் வேகமாகப் பரவுவது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாலும் டெல்டா வகையை விட இது ஆபத்தானது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் ஓமைக்ரான் வகை அதன் டெல்டா வகையை விட அத்தனை ஆபத்தானது இல்லை என அமெரிக்க எதிர்ப்பு சத்து நிபுணர் மருத்துவர் அந்தோனியோ ஃபாசி தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் வேகமாகப் பரவுவது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாலும் டெல்டா வகையை விட இது ஆபத்தானது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
#BREAKING Omicron Covid variant 'almost certainly' not more severe than Delta, top US scientist Fauci tells AFP pic.twitter.com/2mez0stPhh
— AFP News Agency (@AFP) December 7, 2021
முன்னதாக, வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட ஆய்வில், டெல்டா அல்லது பீட்டா வேரியன்ட்களுடன் ஒப்பிடும்போது ஓமைக்ரான் மாறுபாடு ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்று கூறுகிறது. நாட்டின் சுகாதார அமைப்பால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்புகள், முந்தைய வேரியன்ட்களை விட நோய் எதிர்ப்பு சக்தியைத் மிஞ்சும் ஓமிக்ரானின் திறனைப் பற்றிய முதல் தொற்றுநோயியல் ஆதாரம் வெளியிடப்பட்டது. அதற்கான ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை மருத்துவ ப்ரிபிரிண்ட் சர்வரில் பதிவேற்றப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. நவம்பர் 27 ஆம் தேதி வரை கொரோனா பாதித்த 2.8 மில்லியன் நபர்களில் 35,670 பேருக்கு மீண்டும் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 90 நாட்கள் இடைவெளியில் யாருக்கேனும் மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை ரிசல்ட் வந்தால், அவர்கள் மீண்டும் நோய்த்தொற்று உள்ளவர்களாகக் கருதப்பட்டனர்.
"மூன்று அலைகளிலும் முதன்மை நோய்த்தொற்றுகள் ஏற்பட்ட நபர்களில் அதிகமானோருக்கு சமீபத்தில் மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை டெல்டா அலையின் தொற்றுநோயைக் கொண்டுள்ளன" என்று தென்னாப்பிரிக்காவின் DSI-NRF மையத்தின் இயக்குநர் ஜூலியட் புல்லியம் ட்வீட் செய்துள்ளார். தனிநபர்களின் தடுப்பூசி நிலையைப் பற்றிய தகவல்கள் ஆசிரியர்களிடம் இல்லை என்றும் அதனால் தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை Omicron எந்த அளவிற்கு தவிர்க்கிறது என்பதை மதிப்பிட முடியவில்லை என்றும் புல்லியம் எச்சரித்தார். இது குறித்து அடுத்தடுத்து ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது."ஓமைக்ரான் நோய்த்தொற்றுடன் தொடர்புடைய நோயின் தீவிரம் குறித்த தரவுகள் அவசரமாக தேவைப்படுகின்றன, இதில் முந்தைய நோய்த்தொற்றின் வரலாற்றைக் கொண்ட நபர்கள் உட்பட," என்று அவர் கூறினார். "இந்த பகுப்பாய்வு மிகவும் கவலையளிக்கிறது, முந்தைய நோய்த்தொற்றுகளிலிருந்து இது நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி தாக்குவதற்கான வீரியத்தில் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இவை அனைத்தும் இன்னும் ஒரு 'தவறான எச்சரிக்கையாக' இருக்கலாம்? அது அவ்வபோது குறைவாகவும் தெரிகிறது," என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )