Monkey Pox : குரங்கு அம்மை நோயினை, சர்வதேச சுகாதார எமர்ஜென்சியாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு..
Monkeypox; குரங்கம்மை நோயினை சர்வதேச சுகாதார எமர்ஜென்சியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
Monkeypox : குரங்கம்மை நோயினை சர்வதேச சுகாதார எமர்ஜென்சியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்பதால், இதற்காக ஊரடங்கு குறுத்து எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்கள் தொடர்பான இரண்டாவது அவசர கூட்டம் இன்று ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவில் சர்வதேச சுகாதார அவசரநிலை என்ற அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து WHO அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரெயேசூஸ், " சுமார் 75 நாடுகளில், 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன," என்று கூறினார். இதனால் இதுவரை ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என கூறினார். மேலும், இத்தாலி, போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியாஸ்பெயின், உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குரங்கம்மை நோய் பரவல் கண்டறியப்பட்டிருந்தாலும், அண்மையில் ஐரோப்பிய கண்டத்தில் முதல் முறையாக பிரிட்டனில்தான் இதன் பரவல் உறுதியானது.
“A month ago, I convened the Emergency Committee under the International Health Regulations to assess whether the multi-country #monkeypox outbreak represented a public health emergency of international concern”-@DrTedros pic.twitter.com/x7fD5aw8hq
— World Health Organization (WHO) (@WHO) July 23, 2022
இந்தியாவில் குரங்கம்மை
அதிகப்படியான மக்கள் தொகையினை கொண்ட இந்தியாவில் முதலாவதாக குரங்கம்மை பாதிப்பு, இம்மாதம் (ஜூலை) 14ஆம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, 31 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது. கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலமான கேரளாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிலும் குரங்கம்மை வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தீவிரப்படுத்தப்பட்டன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )