Cheese Fat : சீஸ் கொழுப்பு இதயத்தை பாதிக்குமா? எவ்வளவு சாப்பிடலாம்? ஆய்வுகள் சொல்வது என்ன?
தற்போது இந்தியாவிலும் சீஸ் சாப்பிடும் பழக்கம் வெகுவாக அதிகரித்திருக்கிறது.
பெரும்பான்மையான அமெரிக்கர்களின் அன்றாட உணவுகளில் ஒன்று சீஸ். தற்போது இந்தியாவிலும் சீஸ் சாப்பிடும் பழக்கம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் ஒரு ஆண்டில் மட்டும் இதன் தனிநபர் நுகர்வு 40 பவுண்டுகள் அல்லது ஒரு நாளைக்கு 1.5 அவுன்ஸ் விட சற்று அதிகமாகும். இருப்பினும், மக்கள் சீஸ் மீதான தங்கள் விருப்பத்தைப் பற்றி பேசும்போது, அது உடலுக்குக் கெடுதல் என்றாலும் அதனைத் தவிர்க்க முடியாத ஒரு ‘கில்டி ப்ளெஷர்’ என்றே கருதுவார்கள். ஆனால் முழு கொழுப்புள்ள சீஸ் கூட உங்கள் எடையை அதிகரிக்கவோ அல்லது மாரடைப்பையோ கொடுக்காது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களுக்கான உங்கள் ஆபத்தை சீஸ் அதிகரிக்கவோ குறைக்கவோ இல்லை என்று தெரிகிறது, மேலும் சில ஆய்வுகள் இது பாதுகாப்பாக கூட இருக்கலாம் என்று காட்டுகின்றன.
பல ஆண்டுகளாக, அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் குறைந்த கொழுப்புள்ள பால் சாப்பிடுவது சிறந்தது என்று கூறுகிறது, ஏனெனில் முழு-கொழுப்பு சீஸ் போன்ற முழு பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, இது எல்டிஎல் (கெட்ட) கொழுப்பின் அளவை உயர்த்தலாம், இது இதய நோய்க்கான ஆபத்து என்று அறியப்படுகிறது. சீஸ் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், சீஸ் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆம், இதில் கலோரிகள் அதிகம்: சில வகைகளில் அவுன்ஸ் ஒன்றுக்கு 100 கலோரிகள் அல்லது அதற்கு மேல் இருக்கும். மேலும் இதில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. எனவே பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடுவது தவறு என நினைக்கிறார்கள் என்கிறார் டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியின் உணவு மற்றும் சுகாதார நிறுவனத்தின் உதவிப் பேராசிரியரான எம்மா ஃபீனி கூறியுள்ளார்.
சீஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடை அதிகரிப்பு : சீஸ் எடை அதிகரிப்பு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் அது எடையைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு காரணம், இது மற்ற பால் பொருட்களை விட பசியைக் குறைக்கும்.
கார்டியோவாஸ்குலர் நோய்: ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட 15 ஆய்வுகளின் பெரிய மெட்டா பகுப்பாய்வில், இருதய நோய்களில் சீஸ் விளைவைப் பார்த்ததில், அதிகமாக (ஒரு நாளைக்கு 1.5 அவுன்ஸ்) சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை விட 10 சதவீதம் குறைவான ஆபத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது. மற்ற ஆய்வுகளில் சீஸ் இதய நோய் அபாயத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்: சீஸ் மற்றும் முழு கொழுப்பு பால் இரண்டும் குறைந்த ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 21 நாடுகளில் 145,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தினசரி இரண்டு முறை முழு கொழுப்புள்ள பால் அல்லது முழு கொழுப்பு மற்றும் குறைந்த கொழுப்பு கலவையை சாப்பிடுவது நீரிழிவு ஆபத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதே சமயம் குறைந்த கொழுப்புள்ள பால் மட்டுமே சாப்பிடுவது ஆபத்தை சற்று உயர்த்தியது. ஒன்பது வருட ஆய்வின் தொடக்கத்தில் நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களில், ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை பால் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )