கல்லீரல் புற்றுநோய்: ஹெப்டோசெல்லுலர் கார்சினோமாவின் பின்னணியில் உள்ள அபாயங்கள் என்னென்ன?
மனிதனின் முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். கல்லீரலில் தான் புரத தொகுப்பு மற்றும் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் உண்ணும் உணவை உயிர் வேதியியல் செரிமான நிகழ்வுக்கு முக்கியமானதாக உள்ளது.
பாலூட்டி இனத்தின் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். கல்லீரலில் தான் புரத தொகுப்பு மற்றும் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் உண்ணும் உணவை உயிர் வேதியியல் செரிமான நிகழ்வுக்கு முக்கியமானதாக உள்ளது.இது வயிற்றின் வலது மேற்பகுதியிலும், உதரவிதானத்திற்கு அடியிலும் அமைந்துள்ளது. கல்லீரல் புற்றுநோய் உருவாவதற்கு ஹெபாடிடிஸ் பி,ஹெபாடிடிஸ் சி தொற்று அல்லது மது குடிப்பதால் ஏற்படுகிறது.
மேல் வயிற்று வலி, வயிறு வீக்கம், விலா எலும்பின் கீழே வலது பக்கத்தில் ஒரு வீக்கம் அல்லது வலி ஏற்படுதல், காரணமற்ற எடை இழப்பு, மஞ்சள் காமாலை - உங்கள் தோல் வெள்ளையாகவும் மற்றும் கண்கள் மஞ்சளாக மாறுதல் ஆகியனவும் பசியின்மை, களைப்பு, முதுகு வலி ஆகியனவும் இருந்தால் கல்லீரல் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அனுகி சிகிச்சை பெறுவது நல்லது.
சிரோஸிஸ் (Cirrhosis)
மனித உடலில் மிகப் பெரிய உறுப்பும் கல்லீரல்தான். கல்லீரலுக்கு வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. கல்லீரலில் தேவையற்ற ஏதாவது ஒன்று சேரும்போது உதாரணமாக, கொழுப்பு அதிக அளவில் சேர்வது, அதிகளவில் மது அருந்துவது, க்ரோனிக் வைரல் என்று சொல்லப்படும் ஹெபடைடீஸ் பி, ஹெபடைடீஸ் தொற்று போன்றவை ஏற்படும்போது கல்லீரல் பெரிதாக விரிவடைகிறது. இதைத்தான் கல்லீரல் வீக்கம் என்கிறோம். இதனால் புற்றுநோய் ஏற்படலாம்.
டைப் 2 டயபெட்டீஸ்
டைப் 2 டயபெட்டீஸ் இருப்பவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படக் கூடிய அபாயம் அதிகம். அதுவும் சர்க்கரை நோயுடன் மதுப்பழக்கமும் இருந்தால் இந்த பாதிப்பை சொல்லவே வேண்டாம். அதற்கான சாத்தியக்கூறு மிகமிக அதிகம்.
அனபாலிக் ஸ்டீராய்ட்ஸ் (Anabolic steroids)
அனபாலிக் ஸ்டீராய்ட்ஸ் எனப்படும் ஸ்டீராய்டுகள் தடகள வீரர்கள் தங்களின் உடல் கட்டமைப்பப் மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இதன் பக்கவிளைவாக ஹெச்சிசி கேன்சர் ஏற்படா அதிக வாய்ப்பு உள்ளது.
இவை தவிர
1. அல்ஃபா 1 ஆண்ட்டி ட்ரிப்ஸின் குறைபாடு Alpha1-antitrypsin deficiency
2. போர்ஃபீரியா க்யூடனியா டார்டா Porphyria cutanea tarda
3. டைரோசினீமியா Tyrosinemia
4. க்ளைக்கோஜென் ஸ்டோரேஜ் டிசீஸ் Glycogen storage diseases
5. வில்சன் டிசீஸ் Wilson disease
இவை போன்ற அரிய நோய்களாலும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படக்கூடும்
2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் மூன்றுகோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோயிருக்கிறது.
புற்று என்பது உடலுறுப்புகளிலுள்ள சிலவகைச் செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்துபெருகி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு நோயாகும். லட்சம் கோடிக்கணக்கிலான (Trillions) உயிரணுக்களால் ஆன மனிதவுடலின் எந்தவிடத்திலும் புற்று உருவாகலாம். பொதுவாக, மனிதச்செல்கள் வளர்ந்து பின்னர் 'செல்பிரிதல்' (Cell Division) முறை மூலம் உடலுக்குத் தேவையான புதியசெல்களாக உருவாகின்றன. அவ்வாறு உருவான செல்கள் நாள்பட நாள்பட முதிர்ந்து அல்லது சிதைந்து இறந்துவிடுவதால், அவற்றின் இடங்களில் புதியசெல்கள் உருவாகும். இதைத்தான் Apoptosis (முறையான செல்லழிவு-Programmed Cell Death) என்கிறது அறிவியல். இவ்வாறு முறையான செல்லழிவு தொடர்ந்து (சங்கிலி) நிகழ்வதால்தான் மனிதவுடல் உயிர்ப்புடன் இருக்கிறது.
சில நேரங்களில் (பல காரணிகளால்) இந்த முறையான செல்லழிவுத் தொடர்ச்சங்கிலி உடைந்து, ஒரு செல் மட்டும் தோன்றவேண்டிய இடத்தில் ஓராயிரம் செல்கள் தோன்றிப்பெருகலாம். இவ்வாறு, வரம்பின்றிப் பெருகும் செல்க்குவியங்கள் திசுக்கட்டிகள் (Tumours) எனப்படுகின்றன. இவை புற்றுநோயாக மாறக்கூடும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )