உங்களுக்கு 30 வயசு ஆகிடுச்சா? அப்போ கண்டிப்பா இந்த செக்கப் எல்லாம் முடிச்சிடுங்க பெண்களே..
மற்றொரு பக்கம் முழு உடலுக்கும் பரிசோதனைகளைச் செய்வது அத்தியாவசியமாகிறது
முப்பது வயதைக் கடக்கும் ஒவ்வொரு பெண்களும் கரியரில் கவனம் செலுத்துவது எத்தனை முக்கியமோ அந்த அளவுக்கு உடல்நலனில் அக்கறை செலுத்துவதும் முக்கியம்.உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், மனதை வலிமையாக வைத்துக்கொள்வது என ஒரு பக்கம் லிஸ்ட் போட்டாலும் மற்றொரு பக்கம் முழு உடலுக்கும் பரிசோதனைகளைச் செய்வது அத்தியாவசியமாகிறது.
1. மேமோகிராம்
மார்பகப் புற்றுநோயைத் கண்டறிய மேமோகிராம் மேற்கொள்ளப்படுகிறது. மார்பகத்தை கதிர்வீச்சு தட்டுகளுக்கு இடையே அழுத்தி, அந்தக் கருவி எக்ஸ்ரே படங்களைப் பிடிக்கும்.ஆனால் இதனை எத்தனை முறை எப்போது எடுக்கவேண்டும் என்பது பற்றி பெரிய அளவிலான விவாதம் உள்ளது. ஏனெனில் வயது அதிகரிக்க மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கும். அதே சமயம் மெமோகிராமின் பின்விளைவுகளும் மார்பகப் புற்றுநோய் அளவுக்கு ஆபத்தானது. அதனால் 50 வயதுக்கு மேல் அதிக பட்சமாக இரண்டு முறை மேமோகிராம் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
2. தைராய்டு பரிசோதனை
செயலற்ற தைராய்டு (ஹைப்போ தைராய்டிசம்) அல்லது அதிகப்படியான தைராய்டு (ஹைப்பர் தைராய்டிசம்) ஆகியவற்றைக் கண்டறிவதில் இந்த இரத்தப் பரிசோதனைகள் முக்கியமானவை.வருடத்திற்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
3. இரத்த அழுத்தம்
120/80க்கு கீழே இரத்த அழுத்தம் இருப்பது சிறந்தது. இந்த அளவு நீடித்தால் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது போதுமானது.
4. இரத்த சர்க்கரை பரிசோதனை
இது பொதுவாக உணவு உண்பதற்கு முன்பு காலை வெறும் வயிற்றிலும் உணவு உண்டதற்குப் பிறகும் என இரண்டு முறை பரிசோதனை செய்யப்படுகிறது. இது 99க்கும் குறைவாக இருப்பது நலம். ஆனால் அளவு 100 மற்றும் 110 க்கு இடையில் இருந்தால் அது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையைக் குறிக்கிறது. அது 110 க்கு மேல் இருந்தால் நீரிழிவு நோயைக் குறிக்கிறது.
5. வைட்டமின் டி குறைபாடு என்பது மிகவும் பொதுவான நிலை.0 வைட்டமின் டி குறைபாடு பிற்காலத்தில் எலும்பு இழப்பு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கிறது. இரத்தப் பரிசோதனையில் 30க்குக் குறைவான அளவானது இந்த வைட்டமின் குறைபாட்டைக் குறிக்கிறது.
6. எலும்பு அடர்த்தி திரையிடல் (Bone density screening)
பெண்கள் 65 வயதில் எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்வதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் அறிகுறிகளுக்கான பரிசோதனையை மேற்கொள்ளலாம். எலும்பு முறிவு அல்லது குறைந்த உடல் எடை போன்ற ஆஸ்டியோபோரோசிஸ் அறிகுறிகள் உள்ளவர்கள், முன்னதாகவே இதற்கு பரிசோதனை செய்ய வேண்டும். DEXA ஸ்கேன் எனப்படும் இந்த சோதனையில், அறிகுறிகள் இருப்பவர் ஒரு மேஜையில் படுத்துக் கொள்ளும்போது, குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர் அவரது எலும்புகளில் ஊடுருவி படங்களைப் பிடிக்கும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )