Vitamin D Deficiency : பெண்களிடையே அதிகரிக்கும் விட்டமின் 'டி' குறைபாட்டை தடுக்க ஒரே வழி என்ன தெரியுமா?
பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணம், ஒப்பீட்டளவில் ஆண்களை விட குறைவான நேரம் வெயிலில் செலவிடுவதும், வெயிலில் சென்றாலும் சன் ஸ்க்ரீன் அப்ளை செய்து கொள்வதாலும்தான்.
வைட்டமின் டி உடலுக்கு மிகவும் தேவையான ஒரு ஊட்டச்சத்துப் பொருள் ஆகும், இது கால்சியத்தை உறிஞ்சி எலும்புகள் மற்றும் தசைகளை ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், பல பெண்களுக்கு, குறிப்பாக குளிர் பிரதேசங்களில், இமாலய மலைத்தொடரின் அருகில் உள்ள மாநிலங்களில் வசிப்பவர்கள், இந்த வைட்டமின் குறைபாட்டுடன் உள்ளனர். வைட்டமின் டி குறைபாடு, எலும்புகளை பலவீனப்படுத்துதல், உடல் பலவீனம், தசை வலி உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணம், ஒப்பீட்டளவில் ஆண்களை விட குறைவான நேரம் வெயிலில் செலவிடுவதும், வெயிலில் சென்றாலும் சன் ஸ்க்ரீன் அப்ளை செய்து கொள்வதாலும்தான். கூடுதலாக, கர்ப்பிணி, தாய்ப்பால் தரும் பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அதிக அளவு வைட்டமின் தேவைப்படலாம்.
பெண்களிடையே அதிகரிக்க காரணம்
அப்பல்லோ கிளினிக்குகளின் எம்.எஸ் ஆர்த்தோ மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான எம்.பி.பி.எஸ் டாக்டர் மிதுன் என். ஓஸ்வால் கூறுகையில், “வைட்டமின் டி குறைபாடு பிரச்சனை உடையவர்கள் நாடு முழுவதும், குறிப்பாக பெண்களிடையே வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒரு கணக்கெடுப்பில் 90 சதவீத பெண்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருப்பதாகவும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வைட்டமின் டி பற்றாக்குறை 76 சதவீதம் பேருக்கு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது", என்றார். இதற்குக் காரணம் சூரிய ஒளியை உடலில் அதிகம் படவிடாமல் இருப்பதுதான். வைட்டமின் D3 குறைந்தால், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எலும்பு ஆரோக்கியம்
Aster CMI மருத்துவமனையின் கிளினிக்கல் நியூட்ரிஷன் டயட்டெடிக்ஸ் தலைவர் டாக்டர் எட்வினா ராஜ் கூறுகையில், "எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க பெண்களுக்கு சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி அவசியம், மேலும் இது பல்வேறு நாள்பட்ட நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவின் மூலம் போதுமான அளவு உட்கொள்ளாமை, சூரிய ஒளியின் பற்றாக்குறை, உணவின் மூலம் வைட்டமினை உறிஞ்ச இயலாமைப் போன்ற காரணங்களால் பெண்கள் இந்தக் குறைபாட்டிற்கு ஆளாகிறார்கள். உடலில் அதிக கொழுப்பு உடையவர்கள், அதிக மெலனின் நிறமி கொண்ட கருமையான தோல் நிறம் உடையவர்களுக்கு இந்த வைட்டமின் உறிஞ்சுதல் குறைவாக நடக்கிறது," என்று கூறுகிறார்.
சூரிய ஒளியே மூலக்கூறு
சமீபத்தில் கவனிக்கப்பட்ட பிற காரணங்கள், சன் பிளாக் கிரீம்களைப் பயன்படுத்துதல், பயணத்தின்போது முகம் மற்றும் கைகளை மூடுதல், குறைந்த அல்லது கட்டுப்பாடான உணவுகளைப் பின்பற்றுதல், கொழுப்பைப் போதுமான அளவு உட்கொள்ளாமல் இருத்தல் ஆகியவை வைட்டமின் டி3 குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வீழ்ச்சி காரணமாக மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் பெண்களில் இது பொதுவாகக் காணப்படுகிறது. வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது இயற்கையாகவே சில உணவுகளில் உள்ளது. ஆனால் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தைத் தாக்கி அதன் தொகுப்பைத் தூண்டும்போது உடலுக்கு வைட்டமின் டி உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது.
"வைட்டமின் டி எலும்பு கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் அதன் குறைபாடு சோம்பல், மனநிலை தொந்தரவு, முடி உதிர்தல், எலும்பு மற்றும் மூட்டு வலி, சோர்வு ஆகியவற்றை அதிகரிக்கிறது. முதுகு மற்றும் நீண்ட எலும்புகள் கொஞ்சம் வளைந்தாலும் கூட எலும்பு முறிவு நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது," என்று டாக்டர் ஓஸ்வால் கூறுகிறார்.
குறிப்பாக பெண்கள் மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டவுடன் ஆரம்பகால நோயறிதலைப் பெற்று ஆய்வகத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் சூரிய ஒளியின் வெளிப்பாட்டை அதிகரிக்க வேண்டும். வைட்டமின் D3 உணவுகள் கூடுதலாக எடுத்துக்கொள்ளவேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )