மேலும் அறிய

Coffee : காபி, புற்றுநோய்க்கு எதிரா செயலாற்றுதா? இல்ல புற்றுநோய்க்கு காரணமா? எது உண்மை?

சமீபத்தில் காபி குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது. அளவுக்கு அதிகமாக உண்ணப்படும் அனைத்து பொருள்களுமே ஆபத்தை விளைவிக்கும். இது காபி குடிப்பதற்கும் பொருந்தும். 

காலையில் காபி குடிப்பது என்பது நம்மை விழிக்க வைப்பது மட்டுமின்றி நாள் முழுவதும் நம்மைப் புத்துணர்வோடு வைத்திருக்க விரும்புகிறது. உலகின் பிரபலமான பானங்களுள் ஒன்றான காபியில் கஃபெயின் என்கிற வேதிப்பொருள் இருப்பதால், அதனைக் குடிப்பவரின் எனர்ஜி அதிகரிக்கிறது. சோர்வு நீக்கப்படுவதோடு, அவரின் உணர்ச்சி தூண்டப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக காபியைக் குடிப்போர் அதிகமாக இருக்கின்றனர். 

பல்வேறு வேதிப்பொருள்களின் கலவையே காபி. அதில் க்ளோரோஜெனிக் ஆசிட், புட்ரிசீன் முதலான வேதிப்பொருள்கள் இருக்கின்றன. மேலும், காபி உருவாக்கத்தின் மூலமாக பல்வேறு வேதிப்பொருள்கள், பூச்சிக் கொல்லிகள், ரசாயன உரங்கள் முதலானவை உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே காபி என்பது வேதிப்பொருள்களின் கூட்டுப்பொருளாக கருதப்படுகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் காபி குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது. அளவுக்கு அதிகமாக உண்ணப்படும் அனைத்து பொருள்களுமே ஆபத்தை விளைவிக்கும். இது காபி குடிப்பதற்கும் பொருந்தும். 

Coffee : காபி, புற்றுநோய்க்கு எதிரா செயலாற்றுதா? இல்ல புற்றுநோய்க்கு காரணமா? எது உண்மை?

எனினும், இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின்படி, காபி குடிப்பதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. சமீபத்திய சில ஆய்வுகளில், காபி குடிப்பதால் சிறுநீர்ப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் முதலானவை ஏற்படுவதாகக் கூறப்பட்டிருந்தாலும், அதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. 

பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணியாக காபி இருந்துள்ளதும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 

எனினும், இந்த ஆய்வுகள் அனைத்துமே மாற்றத்திற்குரியவை என்பதையும், காபி புற்றுநோய்க்கான காரணியாக இருக்கிறதா, பாதுகாப்பு அளிக்கும் நிவாரணியாக இருக்கிறதா என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காபியில் இருக்கும் வேதிப்பொருள்களான பாலிஃபீனால்கள் புற்றுநோய் மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் முதலானவற்றை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிலுள்ள அக்ரீலமைட் என்னும் வேதிப்பொருள் காரணமாக நுரையீரல் புற்றுநோய்,  சிறுநீர்ப்பை புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் முதலானவை ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

Coffee : காபி, புற்றுநோய்க்கு எதிரா செயலாற்றுதா? இல்ல புற்றுநோய்க்கு காரணமா? எது உண்மை?

கடந்த 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, காபி குடிப்பதால் எண்டோமெட்ரியல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மெலனோமா, வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய்  முதலானவற்றில் நிவாரணம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே போல, காபி குடிப்பதால் நுரையீரல் புற்றுநோய்,  சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. புற்றுநோய்க்கான சர்வதேச ஆய்வு நிறுவனம் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் முழு முடிவாக காபி காரணமாக புற்றுநோய் ஏற்படுகிறது என்றோ, புற்றுநோய் சரியாகிறது என்றோ எந்த ஆய்வும் அறுதியிட்டுக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
Embed widget