(Source: ECI/ABP News/ABP Majha)
Non-Veg Foods | ‛பறப்பது... ஊர்வது... மிதப்பது... உங்கள் இலையில் குவிந்து கிடக்குமா? ’ அசைவப் பிரியர்கள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
அவரவர் உணவு... அவரவர் உரிமை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் நம் உடலுக்கு சில உணவுதளை தான் ஏற்றுகொள்ளும் தன்மை உண்டு.
சக்கரை பொங்கலுக்கு கூட பெப்பர் சிக்கன் வைத்து சாப்பிடும் அளவிற்கு அசைவ ஆர்வம் பெருகிவிட்டது. ஆன்லைன் உணவுகள் வந்த பின், அதிகரித்துள்ள அசைவ நாட்டம், பலரும் காலையிலேயே நான்வெஜ் அயிட்டங்களை உள்ளே தள்ளும் பழக்கத்திற்கு மாறிவிட்டனர். பாயா-பனியாரம், அதிரசம்-ஆம்லேட் என சகட்டுமேனிக்கு காம்பினேஷன்கள் எல்லாம் கலவை உணவாகிவிட்டன.
அவரவர் உணவு... அவரவர் உரிமை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் நம் உடலுக்கு சில உணவுதளை தான் ஏற்றுகொள்ளும் தன்மை உண்டு. அந்த வகையில் , உங்களுக்கு பிடித்த உணவுகளை பாதுகாப்பாக உண்ண சில வழிமுறைகள் உள்ளன. நீங்கள் ஓட்டலில் நுழைந்ததும் உங்கள் இலையை பறப்பவை, மிதப்பவை, நடப்பவை, ஊர்பவை என பல உயிரினங்கள் அடைக்கலாம். அதை நீங்கள் விரும்பி உண்ணலாம். ஆனால், அதை உண்ணும் முன் அவற்றோடு எதை உண்ணக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்,
- எந்த காரணம் கொண்டும். அசைவ உணவுகளுடன் தேன் சேர்க்கக் கூடாது. உணவை விஷமாக்கும் தன்மை தேனுக்கு உண்டு என்கிறார்கள்.
- முள்ளங்கியை வேக வைத்து, அத்துடன் இறைச்சியை சேர்த்து சாப்பிடக்கூடாது. இறைச்சியில் இருக்கும் புரதமும், முள்ளங்கியில் உள்ள புரதமும் இணைந்தால் அதனால் உருவாகும் ரத்தம் விஷமாக மாறலாம்.
- மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்குகளை இறைச்சியுடன் சேர்த்து உண்ணக் கூடாது. பலர் அதிகம் உருளைக்கிழங்கை இறைச்சியோடு பயன்படுத்துவோம். அது ஆபத்தானதே. இறைச்சியும், கிழங்குகளும் செரிமான நேரம் அதிகம் எடுப்பவை. அவற்றை உண்பதால், உடல் எடை அதிகரிக்கும். வாயுத் தொல்லைகளை சந்திக்க நேரிடலாம்.
- மைதா தயாரிப்பு உணவுகளை இறைச்சியுடன் எடுத்துக் கொள்ளக்கூடாது. புரோட்டா பிரியர்களே புரியுதா? புரோட்டாவை இறைச்சியோடு சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். பிற மைதா உணவுகளுக்கும் இதுவே பொருந்தும்.
- உளுந்து உணவுகளுடன் இறைச்சியை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதுவும் ஆபத்தானது. மலச்சிக்கலை அது ஏற்படுத்தும். அதே போல தான் பயிறு, தானியங்கள், கீரைகள் போன்றவற்றை இறைச்சியோடு சேர்த்து உண்ணக்கூடாது.
- பாலில் தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சியை சேர்க்க கூடாது. குறிப்பாக தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள். கடல் உணவுகளுக்கு தயிர் சுத்தமாக ஆகாது. சாப்பிடவே கூடாது.
- கடலை எண்ணெய், கடுகு எண்ணெய்யில் இறைச்சிகள் சமைத்து சாப்பிடக்கூடாது. அவற்றால் சமைக்கும் பொருட்களின் செரிமான நேரம் அதிகரிக்கும்.
- குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த பொருட்களை அசைவ உணவுடன் சாப்பிடக்கூடாது. தூக்கமின்மை, உடல் அசதி போன்ற உபாதைகளை ஏற்படுத்தும்.
எவையெல்லாம் சாப்பிடலாம்...!
நல்லெண்ணெயில் இறைச்சியை சமைத்து சாப்பிடலாம். பாப்பாளியோடு சேர்த்து சாப்பிடலாம். அசைவ உணவுக்கு பின் எலுமிச்சை சாறு பருகலாம். உணவுக்குப் பின் பெருஞ்சீரகம் சாப்பிடலாம். சுடுதண்ணீர் குடிப்பது மிக நல்லது. சுக்குமல்லி காபி அசைவ உணவுக்கு நல்ல பானம், தயிர் இல்லாத வெறும் வெங்காயத்தை இறைச்சியுடன் உண்ணலாம். முடிந்த அளவு அசைவத்தில் இஞ்சி சேர்ப்பது உடலுக்கு மிக நல்லது.
இனிமேல் அசைவத்தை சாப்பிடும் முன் இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )