விழுப்புரம்: தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.100 இலவசம்
மரக்காணம் அருகே தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூபாய் 100 இலவசம், சுகாதாரத்துறை ஆய்வாளர் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுகுப்பம் கிராமத்தில் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, அவருக்கு வரும் மத ஊதியத்தில் , தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ரூபாய் 100, மற்றும் இதனை தொடர்ந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வருபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது, மேலும் சமூக வலை தளங்களில் தடுப்பூசி பற்றிய தகவல்கள் தவறாக பரப்பப்பட்டு வருகிறது, இந்த அச்சம் போக்கும் வகையில் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு எடுத்துரைத்துள்ளார், பின்னர் நடுக்குப்பம் கிராமத்து தடுப்பூசி மையம் என சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது, இந்த செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து நடுகுப்பம் கிராமத்தை 100% தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமமாக சாதனை படைக்க உள்ளதாகவும், அதேபோல் அனைத்து கிராமங்களிலும் இது போன்ற பணியை தொடர அவர் நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக மரக்காணம் பகுதியில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் விரைவில் விரட்டப்படும் எனவும் தெரிவித்தார். தொடக்க காலத்தில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய மக்கள், தற்போது ஓரளவு ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அதே வேளையில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டாத மக்களை தடுப்பூசி போட வைக்க நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு பரிசுகள், பிரியாணி போன்ற இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடுகுப்பம் கிராமத்தில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி போடுபவர்களுக்கு ரூபாய் 100 இலவசம் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் வேளையில், மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டால், தீவிர காய்ச்சல், சளி, இருமல் போன்ற மிகவும் கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதுவும் குறிப்பாக இப்போது உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று காரணமாக பலர் இறந்தும் வருகின்றனர். இந்த கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே ஒரு சிறந்த வழி கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுதான். ஒருபுறம் தடுப்பூசிக்கான பற்றாக்குறை இருந்தாலும், மறுபுறம் தடுப்பூசி கிடைத்தும் போடலாமா அல்லது வேண்டாமா என்ற எண்ணத்தில் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துடன் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர்.
ஆரம்பத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது, அதைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் உள்ள மக்களுக்கு கோவ்ஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-V தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி குறித்த கட்டுக்கதைகள் வாட்ஸ்அப் போன்ற சமுக ஊடகங்களில் பரவுவதால் மக்கள் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது .
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )