TN Corona Update: மதுரையில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு; 9 பேர் உயிரிழப்பு!
மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் நேற்று வரை 793612 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் 554151 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 6780 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 78 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72144-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 61 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 70421 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 9 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1093 இருக்கிறது. இந்நிலையில் 630 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 59 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44415-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 106 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43200 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 523 - ஆக இருக்கிறது. இந்நிலையில் 692 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை படிக்க இங்கு கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 65 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17566-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 82 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 16749-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 189-ஆக இருக்கிறது. இந்நிலையில் 628 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 19 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19588 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 46 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 18988-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 330 ஆக இருக்கிறது. இந்நிலையில் 270 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 74 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26826-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 62 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25945-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 317 இருக்கிறது. இந்நிலையில் 564 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க -Game Addiction | ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்துகள்.. மனநல ஆலோசகரின் அறிவுரை!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )