TN Corona Update: தமிழ்நாட்டில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்தது. எனினும் தற்போது டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இன்று தமிழ்நாட்டில் எந்தவித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
Today #COVID19 status for #TamilNadu reports 31 new cases of covid , For #Chennai 16 new cases . Total number of cases for Chennai rises to 751335 #TNCoronaUpdate pic.twitter.com/epx9MGmamL
— Rain@Chennai (@RainChennai1) April 20, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )