மேலும் அறிய

Mohammed Shami: கம்பேக் கொடுக்க தயாரான முகமது ஷமி - காயங்கள் ஓவர், 11 நாட்களில் 6 டி20 போட்டிகள் - ஆஸி., பறக்கிறாரா?

Mohammed Shami: இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohammed Shami: காயத்திலிருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காயத்திலிருந்து மீண்ட ஷமி:

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது காயமடைந்த ஷமி, ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,  34 வயதான அவர் தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த விமானத்தில் ஏற வேண்டுமா என்பது குறித்து சிந்திக்க தேர்வாளர்களுக்கு நிறைய வழங்கியுள்ளார். அந்த அளவிற்கு தனது உடல் தகுதியை பயிற்சி ஆட்டங்களில் நிரூபித்து அசத்தியுள்ளார். 

கம்பேக் கொடுத்த ஷமி

ரஞ்சிக் கோப்பை போட்டியில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிராக, பெங்கால் அணிக்காக களமிறங்கிய ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசத்தலான பந்துவீச்சின் மூலம் உடற்தகுதியை நிரூபித்த அவர், ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் செல்வார் என்று ஊகிக்கப்பட்டது.

இருப்பினும், ஆஸ்திரேலியா செல்வதற்கு ஒரு போட்டி போதுமானதாக இல்லை. தற்போது நடந்து வரும் சையத் முஷ்டாக் டிராபிக்கான பெங்கால் அணியில் வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற்றார் . கடந்த 11 நாட்களில் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 23.3 ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஐந்து விக்கெட்டுகளில் மூன்று ஐதராபாத் அணிக்கு எதிராக வந்தவை. ரன்களை விட்டுக் கொடுப்பதிலும் மிகவும் சிக்கனமாக செயல்பட்டு திறம்பட விளங்கினார். இதனிடையே, 15 டாட் பால்களையும் வீசியுள்ளார். தொடர்ந்து, பெங்கால் அணி வியாழனன்று ராஜஸ்தானுக்கு எதிராக ராஜ்கோட்டில் விளையாட உள்ளது. ஷமி பிளேயிங் XI இல் தேர்ந்தெடுக்கப்பட்டால், இது 13 நாட்களில் அவரது ஏழாவது டி20 ஆகும்

ஆஸ்திரேலியா பறப்பாரா ஷமி?

ஷமி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என்பதற்கும், பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி மூன்று டெஸ்டுகளுக்கு அவர் களமிறங்க வேண்டும் என்பதற்கும் இந்த செயல்பாடுகள் போதுமானதாகவே உள்ளன. ஆனால், பிசிசிஐ என்ன முடிவு எடுக்க உள்ளது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஐசிசி போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கான தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக ஷமி திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் 6ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget