தேனி : இன்று மட்டும் 19 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு!
தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 19 பேர் உயிரிழப்பு. கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் தடுப்பூசிகள் முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இன்று ஒரே நாளில் வைரஸ் தொற்றால் 19 நபர்கள் உயிரிழந்துள்ளனர்
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படாமல் இருப்பதற்காக போடப்படும் கோவாக்சின், கோவிசீல்டு தடுப்பூசிகள் முற்றிலும் இல்லாத நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். நேற்று உயிரிழப்புகள் இல்லாத நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 19 நபர்கள் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று வரை 40111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிகிச்சையில் குணமடைந்து 36094 போ் வீடு திரும்பியுள்ளனர். இன்று மற்றும் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து 755 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். தேனி மாவட்டத்தில் மட்டும் இதுவரை மொத்தம் கோவாக்சின், கோவிசீல்டு தடுப்பூசிகள் 125000 பேருக்கு போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசிகள் முற்றிலும் இல்லாத நிலையில் கடந்த 2 நாட்களாக பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )