மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,672 கன அடியில் இருந்து 2,360 கன அடியாக குறைந்தது

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 2,360 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,672 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,360 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,672 கன அடியில் இருந்து 2,360 கன அடியாக குறைந்தது

அணையின் நீர் மட்டம் 105.18 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 71.71 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியில் இருந்தது ஜனவரி 29 ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீர் 300 கன அடியாக இருந்த நிலையில் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 750 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிப்பு. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரானது மூடப்பட்டது . விவசாய பணிகள் முடிவடைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,672 கன அடியில் இருந்து 2,360 கன அடியாக குறைந்தது

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 106.87 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 28.69 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 275 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4249 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.29 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.33 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 188 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 1,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?

Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு

ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?

Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க

தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்

Embed widget