Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
நான் படத்தில் மட்டும் கில்லி அல்ல, அரசியலிலும்தான் என்பதுபோல், தவெக தலைவர் விஜய் தனது ஒவ்வொரு அரசியல் நகர்வையும் பிளான் போட்டு செய்து வருகிறார். அவரது அடுத்த விசிட் பற்றிய தகவல்தான் இது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு ஜெர்க் கொடுத்தார். அதன் பிறகு சமீபத்தில் பரந்தூருக்கு சென்று, அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, ஆளும் கட்சி உட்பட மற்ற கட்சிகளுக்கே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என அனைவருமே கவனிக்கத் தொங்கிவிட்டனர். இந்த நிலையில், அவரது அடுத்த நகர்வு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய்யை கிண்டலடித்த திமுக
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியபின், விஜய் அவ்வளவாக வெளியில் வராமலேயே தனது அரசியலை செய்துகொண்டிருந்தார். குறிப்பாக, தலைவர்கள் பிறந்தநாளில் அவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பது போன்ற எந்த செயலிலும் ஈடுபடவில்லை. இதனால், அவரை Work From Home அரசியல்வாதி என ஆளும் திமுக கடுமையாக விமர்சித்தது. இருந்தாலும், அவசரப்படாமல் தனது நகர்வுகளை நிதானமாக விஜய் மேற்கொண்டு வந்தார்.
அரசியல் ஆலோசகருடன் இணைந்து பக்கா ஸ்கெட்ச்
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஒரு மீட்டிங்கை போட்டுள்ளார் விஜய். அப்போது, நாம் இப்படியே அமர்ந்திருந்தால் வேலைக்கு ஆகாது, கள அரசியல்தான் எடுபடும், அதனால் நாம் களத்தில் இறங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த ஐடியாவை ஏற்ற விஜய், அதை எங்கிருந்து தொடங்குவது என ஆலோசித்துள்ளார். அப்போது, விடை கிடைக்காமல் உள்ள பரந்தூர், வேங்கைவயல், அரிட்டாபட்டி போராட்டங்களை கையில் எடுக்கலாம் என்ற ஆலோசனையை விஜய் ஏற்கவே, பரந்தூரிலிருந்து தொடங்கலாம் என ஜான் ஆரோக்கிய சாமி கூறியுள்ளார்.
பரந்தூரை டிக் செய்த விஜய்
ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததால், ஜான் கூறிய உடன் பரந்தூரிலிருந்தே கள அரசியலை தொடங்கலாம் என டிக் செய்துள்ளார் விஜய். அதன்படி, அங்கு விசிட் அடித்து பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தினார். பரந்தூருக்கு விஜய் விசிட் அடித்த செய்தி தேசிய செய்தியாக மாறியது. இதைத் தொடர்ந்து, விஜய்யின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழத் தொடங்கியது.
வேங்கைவயலுக்கு செல்லும் விஜய்.?
இந்த நிலையில், தன்னுடைய அடுத்த விசிட்டுக்காக வேங்கைவயலை விஜய் செலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றபோது, வேங்கைவயல் பிரச்னைக்காக குரல் கொடுத்தவர்கள் மேடையில் கவுரவிக்கப்பட்டனர். அதோடு, ஆதவ் அர்ஜூனா பேசும்போது, விஜய் வேங்கைவயலுக்கு சென்று, அங்கு, குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்திற்கு நீதி கிடைக்காமல் நீண்ட நாட்களாக போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், விஜய் அங்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் மூலம், திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார். இது விஜய்க்கு சாதகமான அரசியல் சூழலை ஏற்படுத்துவதோடு, எதிர்க்கட்சிகளுக்கும் சிறிது கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இதையும் படிங்க: Modi to Meet Trump?: நண்பர் ட்ரம்ப்பை சந்திக்கிறாரா மோடி.? வெளியான புதிய தகவல்...
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

