Tamilnadu Corona Update: 100க்கு கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு - இன்றைய முழு நிலவரம்!
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா உயிரிழப்பு இன்று 100க்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 127 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,63,817 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 5,127ஆக அதிகரித்துள்ளது.
Suchitra Dowry Death | கேரளாவில் இன்னொரு வரதட்சணை மரணம் : சுசித்ராவுக்கு நடந்தது என்ன?
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 65 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 732 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 308 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 314 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 308 ஆக உள்ளது.
கோவை 649, ஈரோடு 530, சேலம் 343, திருப்பூர் 316, தஞ்சாவூர் 244, செங்கல்பட்டு 248, நாமக்கல் 198, திருச்சி 191, திருவள்ளூர் 126, கடலூர் 122, திருவண்ணாமலை 145, கிருஷ்ணகிரி 114, நீலகிரி 118, கள்ளக்குறிச்சி 124, மதுரை 84, ராணிப்பேட்டை 79, கன்னியாகுமரி 93, நாகை 72, தருமபுரி 109, விழுப்புரம் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,290 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 64 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 27 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8161 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 9, கோவை, திருச்சியில் தலா 7 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 19 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 42,801 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 7,159 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 23,90,783 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
Tamil Nadu reports 5,127 new #COVID19 cases, 7,159 recoveries and 91 deaths today.
— ANI (@ANI) June 27, 2021
Active cases: 42,801
Total recoveries: 23,90,783
Death toll: 32,290 pic.twitter.com/453TUohpjP
12 வயதிற்குட்பட்ட 201 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 38,536 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,652 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 5629 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
PM Modi on Tamil: ''தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான்'' - பிரதமர் மோடி பேச்சு
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )