Tamil Nadu Coronavirus LIVE: 12 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 479 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,53,390 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,479 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 3 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 849 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 209 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 209 ஆக உள்ளது.
கோவை 407, ஈரோடு 311, சேலம் 228, திருப்பூர் 201, தஞ்சாவூர் 206, செங்கல்பட்டு 180, நாமக்கல் 113, திருச்சி 146, திருவள்ளூர் 89, கடலூர் 83, திருவண்ணாமலை 115, கிருஷ்ணகிரி 70, நீலகிரி 105, கள்ளக்குறிச்சி 76, கன்னியாகுமரி 69, மதுரை 65, தருமபுரி 79, விழுப்புரம் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 73 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,132 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 55 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 9 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8232 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 8, சென்னை, கோவை, கடலூரில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 12 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
தமிழ்நாட்டில் இன்று 3,479 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 479 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,53,390 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,479 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 3 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 849 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 209 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 209 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 73 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,132 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 55 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 9 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8232 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 8, சென்னை, கோவை, கடலூரில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 12 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
ஊடகவியலாளர், குடும்பத்தினர் 540 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
சென்னையில் சிறப்பு தடுப்பூசி முகாமில் ஊடகத்தினர் மற்றும் குடும்பத்தினர் என 540 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்துடன், கொரோனா தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான இந்திய முறை மருந்துகளும் முகாமில் வழங்கப்பட்டது.
குணமடைவோர் சதவீதம் 97.2% ஆக அதிகரிப்பு
தினசரி கொரோனா பாதிப்பில் 80%, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது . கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம் 97.2% ஆக அதிகரித்துள்ளது - சுகாதாரத்துறை இணை செயலர் லவ் அகர்வால்
நாடு முழுவதும் 37 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 37 கோடியே 7 லட்சத்து 23 ஆயிரத்த 840 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 23 லட்சத்து 80 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளது. மாநிலங்களில் 1 கோடியே 66 லட்சத்து 63 லட்சத்து 643 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு தைரியமாக அனுப்ப வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மருத்துவ குழுவினரின் கருத்துக்களை கேட்ட பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு தைரியமாக அனுப்ப முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.