மேலும் அறிய

TN Covid 19 Task Force : புலி, சிங்கங்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கத் தனிப்படை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

பல்வேறு துறைகளிடையிலான ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் நோய்க்கிருமிகளின் உயிர்வாழும் காலம், மேப்பிங், அதனைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் குறித்து இந்தப் பாதுகாப்புப் பணிக்குழு கண்காணிக்கும்

வனவிலங்குப் பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளில் கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாப்பதற்கான தனிப்படை ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்த அரசு செய்திக்குறிப்பில், ‘ சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள  வனவிலங்குகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கள ஆய்வு அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்துக் கண்காணிக்கவும் அவர்களுக்கான வழிகாட்டலை வழங்கவும் மாநில அளவிலான பணிக்குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு துறைகளிடையிலான ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் நோய்க்கிருமிகளின் உயிர்வாழும் காலம், மேப்பிங், அதனைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் குறித்து இந்தப் பாதுகாப்புப் பணிக்குழு கண்காணிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஏழுபேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. 

முன்னதாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் அனைத்துக்கும் கொரோனா தொற்று உறுதியானது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வந்தது . இதனையடுத்து வண்டலூர் பூங்கா கடந்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி மூடப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மீண்டும் வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டது. உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை.  அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டபிறகே அனுமதிக்கப்பட்டனர். மனிதர்களிடம் இருந்து வைரஸ் தொற்று விலங்குகளுக்கு பரவாமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்ட பிறகே பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.


TN Covid 19 Task Force : புலி, சிங்கங்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கத் தனிப்படை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

தொடர் கண்காணிப்பில் இருந்த போது கடந்த மே மாதம் 26-ஆம் தேதி நீலா என்கிற ஒன்பது வயது சிங்கத்திற்கு உடம்பு சரி இல்லாமல் இருந்துள்ளது. நீலா என்ற சிங்கத்திற்கு தொடர் இருமல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தும் சிங்கத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்குமோ என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதனையடுத்து சிங்கத்தின் மாதிரிகளை, போபாலில் உள்ள தேசிய வனவிலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின்போது சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருந்தும் மீண்டும் ஒரு முறை  உறுதி செய்வதற்காக 11 சிங்கங்களின் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்பது சிங்கங்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  கடந்த ஐந்தாம் தேதி நீலா என்ற பெண் சிங்கம் உயிர் இழந்தது.

இந்நிலையில் சிங்கங்களுக்கு தாக்கப்பட்டு இருந்த வைரஸ் தொற்றின் மரபணு குறித்து ஆய்வு மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் முடிவெடுத்து  தேசிய உயர் பாதுகாப்பு மற்றும் விலங்குகள் நோய் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதில் சிங்கங்களுக்கு பரவியது மாறுபட்ட கொரோனா  வைரஸ் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு டெல்டா வகை வைரஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு செய்ததில் அவை B.1.617.2(delta) எனும் வகையைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இந்த வகை மரபணு கொண்ட வைரஸானது வேகமாக பரவும்தன்மை கொண்டது என தெரிய வந்துள்ளது.


TN Covid 19 Task Force : புலி, சிங்கங்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கத் தனிப்படை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வந்தது . இதனையடுத்து வண்டலூர் பூங்கா கடந்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி மூடப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மீண்டும் வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டது. உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை.  அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டபிறகே அனுமதிக்கப்பட்டனர். மனிதரிடம் இருந்து வைரஸ் தொற்று விலங்குகளுக்கு பரவாமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்ட பிறகே பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.

தொடர் கண்காணிப்பில் இருந்த போது கடந்த மே மாதம் 26-ஆம் தேதி நீலா என்கிற ஒன்பது வயது சிங்கத்திற்கு உடம்பு சரி இல்லாமல் இருந்துள்ளது. நீலா என்ற சிங்கத்திற்கு தொடர் இருமல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தும் சிங்கத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்குமோ என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதனையடுத்து சிங்கத்தின் மாதிரிகளை, போபாலில் உள்ள தேசிய வனவிலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின்போது சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருந்தும் மீண்டும் ஒரு முறை  உறுதி செய்வதற்காக 11 சிங்கங்களின் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்பது சிங்கங்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  கடந்த ஐந்தாம் தேதி நீலா என்றபெண் சிங்கம் உயிர் இழந்தது.

இந்நிலையில் சிங்கங்களுக்கு தாக்கப்பட்டு இருந்த வைரஸ் தொற்றின் மரபணு குறித்து ஆய்வு மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் முடிவெடுத்து  தேசிய உயர் பாதுகாப்பு மற்றும் விலங்குகள் நோய் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதில் 4 சிங்கங்களுக்கு பரவியது மாறுபட்ட கொரோனா  வைரஸ் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை வைரஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு செய்ததில் அவை B.1.617.2(delta) எனும் வகையைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது.இந்த வகை மரபணு கொண்ட வைரஸானது வேகமாக பரவும் தன்மை கொண்டதது என தெரிய வந்துள்ளது.

Also Read: வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்குப் பரவியது மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்று..! 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok Sabha Election 2024 LIVE: இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அதிக ஆர்வம் - தலைமை தேர்தல் அதிகாரி
TN Lok Sabha Election 2024 LIVE: இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அதிக ஆர்வம் - தலைமை தேர்தல் அதிகாரி
Lok Sabha Election 2024: மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
Rajinikanth:
"ஓட்டு போடுவதில் மரியாதை, கௌரவம் இருக்கு” - வாக்காளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!
Lok Sabha Election 2024: வாக்குச்சாவடியில் ஓட்டு போட கூட்டம் இருக்கா? அறிந்துகொள்ள புதிய வசதி!
வாக்குச்சாவடியில் ஓட்டு போட கூட்டம் இருக்கா? அறிந்துகொள்ள புதிய வசதி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok Sabha Election 2024 LIVE: இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அதிக ஆர்வம் - தலைமை தேர்தல் அதிகாரி
TN Lok Sabha Election 2024 LIVE: இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அதிக ஆர்வம் - தலைமை தேர்தல் அதிகாரி
Lok Sabha Election 2024: மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
Rajinikanth:
"ஓட்டு போடுவதில் மரியாதை, கௌரவம் இருக்கு” - வாக்காளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!
Lok Sabha Election 2024: வாக்குச்சாவடியில் ஓட்டு போட கூட்டம் இருக்கா? அறிந்துகொள்ள புதிய வசதி!
வாக்குச்சாவடியில் ஓட்டு போட கூட்டம் இருக்கா? அறிந்துகொள்ள புதிய வசதி!
Coimbatore : 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் : கோவை திமுக வேட்பாளர் நம்பிக்கை
2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் : கோவை திமுக வேட்பாளர் நம்பிக்கை
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Election 2024: மணிப்பூரில் நூதன தேர்தல் - 2 தொகுதிகளுக்கு இப்படியெல்லாமா வாக்குப்பதிவு நடைபெறும்..!
Lok Sabha Election 2024: மணிப்பூரில் நூதன தேர்தல் - 2 தொகுதிகளுக்கு இப்படியெல்லாமா வாக்குப்பதிவு நடைபெறும்..!
Embed widget