Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் வீணான தடுப்பூசிகள் எண்ணிக்கை 2%க்கும் கீழ் குறைந்தது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தனியார் மையங்களில் தடுப்பூசியின் கொள்முதல் மற்றும் நிர்வாகம் குறித்து தினசரி ஆய்வை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தனியார் மையங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இடையே ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அதனைத் தடுப்படுப்பதற்கு விரைவான மற்றும் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
தொழிலாளர் சக்தி தான் கொரோனாவை எதிர்த்துப் போராட உதவியது - நரேந்திர மோடி
இந்தியாவின் திறமையான தொழிலாளர் சக்தி தான் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தொழிலாளர் சக்தி தான் கொரோனாவை எதிர்த்துப் போராட உதவியது - நரேந்திர மோடி
இந்தியாவின் திறமையான தொழிலாளர் சக்தி தான் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் போடப்பட்ட தடுப்பூசிகள் நிலவரம்
நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,97,058 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 20, 34, 632 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 14, 62, 426 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்
தமிழ்நாட்டில் வீணான தடுப்பூசிகள் எண்ணிக்கை 2%க்கும் கீழ் குறைந்தது
தமிழ்நாட்டில் தடுப்பூசி போடப்படும் தொடரந்து அதிகரித்து வருவதால், தடுப்பூசி வீணாகும் எண்ணிக்கை 2%க்கும் கீழ் குறைந்ததாக மாநில சுகாதாரத் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பயனாளிகளில் 14% பேர கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போட்டுக் கொண்டுள்ளனர். 4% பேர் இரண்டு கட்ட தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர்.
மாநில அரசுகளுக்கு போதிய அளவு வழங்கப்படுகிறது - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்
கோவிட்-19 க்கான தடுப்பு மருந்து மாநில அரசுகளுக்கு போதிய அளவு வழங்கப்படவில்லை என வெளியான செய்திகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "சமூக வலைதளத்தில் இக்கருத்தை பதிவு செய்துள்ள அவர், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதாக குறை கூறியுள்ளார். ஜுன் மாதத்தில் மாநில அரசுகளுக்கு 11 கோடிக்கும் கூடுதலான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜுலை மாதத்தை பொறுத்தவரை 13 கோடிக்கும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.