India corona cases today: தினசரி கொரோனா பலி 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 62 ஆயிரம், நேற்று 67 ஆயிரமாக இருந்த பாதிப்பு இன்று 62 ஆயிரமாக ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் 62,480 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து ஆயிரத்து 313இல் இருந்து 2 கோடியே 97 லட்சத்து 62 ஆயிரத்து 793-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து 903ல் இருந்து 3 லட்சத்து 83 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 89,977 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 84 லட்சத்து 91 ஆயிரத்து 670இல் இருந்து 2 கோடியே 85 லட்சத்து 80 ஆயிரத்து 647 ஆக அதிகரித்துள்ளது.
India reports 62,480 new #COVID19 cases, 88,977 discharges & 1,587 deaths in last 24 hrs, as per Health Ministry
— ANI (@ANI) June 18, 2021
Total cases: 2,97,62,793
Total discharges: 2,85,80,647
Death toll: 3,83,490
Active cases: 7,98,656 (below 8 lakh after 73 days)
Vaccination: 26,89,60,399 pic.twitter.com/hhd9c2krzs
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 95.93 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.29 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 656-ஆக குறைந்துள்ளது. 73 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுவரை 26 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 399 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
India Covid-19 Data Tracker: கொரோனா எண்ணிக்கையில் கேரளா முதலிடம்; மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று குறைந்து வருவதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிட்னியா மாறியதா மதுரை? சிந்திய சட்னியாக இருப்பதாக குற்றச்சாட்டு!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )