Delta Plus coronavirus: தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
![Delta Plus coronavirus: தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா! Delta Plus corona affected one per person in Tamil Nadu, know in details Delta Plus coronavirus: தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/ffd804ca659ac7a8d071be1a98752323_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும், டெல்டா பிளஸ் கொரோனா உறுதியான நபர் சென்னையைச் சேர்ந்தவரா என ஆய்வு செய்து வருவதாகவும், ஆயிரத்துக்கு மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளாவில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்த நிலையில், புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள டெல்டா பிளஸ் வகை கொரோனா, மூன்றாவது அலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும், மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 22 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 16 பேர் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனைத்தொடர்ந்து, சிறிய பாதிப்பு போல தோன்றும் இந்தப் பிரச்னை பெரிதாக விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பெரும் கூட்டங்கள், பார்ட்டிகள் போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து தற்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் : ஹரியானாவில் ஒருவர் கைது
டெல்டா வைரசின் தாக்கம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், டெல்டா வைரசை காட்டிலும் மிகவும் அதிக வீரியமுள்ள “டெல்டா பிளஸ்” கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து கடந்த சில தினங்களில்தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்த சூழலில், மிகவும் ஆபத்து வாய்ந்த டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதும், கொரோனா மூன்றாவது அலை வரும் ஆகஸ்ட் மாதம் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் பொதுமக்களை மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.
ஆர்டர் செய்ததோ ரிமோட் கார்.. பெற்றதோ பிஸ்கெட் பாக்கெட்: மன்னிப்புக்கேட்ட அமேசான்!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)