Delhi Covid-19: 2020-க்கு பின் இதுவே முதல்முறை.. பூஜ்ஜியம் என பதிவான கொரோனா பாதிப்பு..
டெல்லியில் 2020ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது.
டெல்லியில் 2020ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 89 புதிய கொரொனா பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதையடுத்து, இது கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் 27 க்கு பிறகு பதிவான குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகள் ஆகும். அதேபோல், தற்போதுவரை ஒட்டுமொத்த இந்தியாவில் 2,035 கீழ் பாதிப்புகள் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும், கடந்த ஜனவரி 12 ம் தேதி கேரள அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், பொது இடங்களில் முககவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் கூட்டங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதையும், சானிடைசர்களைப் பயன்படுத்துவதையும் கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஜனவரி 12 தேதியிட்ட அதன் உத்தரவில், மக்கள் தங்கள் கைகளை கழுவுவதற்கும், சானிடைசர்களைப் பயன்படுத்துவதற்கும் வசதிகளை உறுதி செய்யவும், கடைகள், திரையரங்குகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளின் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம்:
கொரொனா பாதிப்பு எண்ணிக்கை: 4.46 கோடி (4,46,81,233)
இறப்பு எண்ணிக்கை: 5,30,726
கடந்த 24 மணி நேரத்தில் 84 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
டெல்லி:
கடந்த மார்ச் 2020ம் ஆண்டுக்கு பிறகு தலைநகர் புதுடெல்லியில் முதல்முறையாக கொரோனா பாதிப்புகள் எதுவும் இல்லை. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் உள்ள கொரோனா பாதிப்பு 10 ஆக மட்டும் உள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரொனாவால் எந்தவொரு இறப்பும் பதிவாகவில்லை. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 9ம் தேதி அன்று டெல்லியில் ஒரே ஒரு மரணம் மட்டுமே பதிவானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் 931 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டது. அதில், ஒரு பாதிப்பு கூட பதிவாகவில்லை.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கொரோனா பரவுவது தொடர்பாக தானாக முன்வந்து இந்திய உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது.
கோவோவாக்ஸ்:
கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ்கள் கொடுக்கப்பட்ட பெரியவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி Covovax ஒரு பன்முக பூஸ்டர் டோஸை இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டு ஜெனரல் அங்கீகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )