மேலும் அறிய

Covid19: துபாயில் இருந்து தமிழ்நாடு வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Covid19: துபாயில் இருந்து தமிழ்நாடு வந்த இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Covid19:  துபாயில் இருந்து தமிழ்நாடு வந்த இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது உருமாறிய தொற்றா எனபதை கண்டறிய சோதனை மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இருவரும் புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நேற்று, சீனாவில் இருந்து தமிழ்நாடு வந்த விருதுநகரசைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உருமாறிய கொரோனா  வைரஸ் (  BF.7 வகை  ) இந்தியாவிலும் பரவி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சீனாவில் இந்த உருமாறிய கொரோனா தொற்றானது, மிகவும் வேகமாகப் பரவி அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து சீனா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகில் பரவும் கொரோனா:

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவலானது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு வரவுள்ள நிலையில், மக்கள் பல இடங்களில் கூட்டமாக கூடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், பல மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றானது, கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது. உருமாறிய கொரோனா  வைரஸ் (  BF.7 வகை  ) இந்தியாவிலும் பரவி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா முதல் அலை இரண்டாவது அலை என புரட்டி எடுத்ததைப் போலவே, அடுத்த கொரோனா அலையாக, உருமாறிய கொரோனா பரவலும் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவின் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இந்த உருமாறிய வைரஸ் தொற்றால், வயதில் முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

கொண்டாட்டங்களின்போது முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை சைதப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா பாதிப்புடன் சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய் மற்றும் மகள் இருவரும் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். இருவரும் நலமாக உள்ளனர். மேலும், கொண்டாட்டங்களின்போது முகக்கவசம் அணிவது அவசியம். முகக்கவசம் அணிவது என்பது சுயக்கட்டுப்பாடு. தற்போது பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுகோள் வைக்கின்றேன். 

ஒன்றிய அரசு தடுப்பூசி விநியோகத்தையும், தடுப்பூசி உற்பத்தியையும் நிறுத்திவிட்டது. தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் உள்ளன. இதில், 2 லட்சத்து 70 ஆயிரம் கோவேக்‌ஷின் தடுப்பூசிகளும், 40 ஆயிரம் கோவிட் - ஷீல்டும் கையிருப்பில் உள்ளன. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களில் 60 சதவீதத்தினருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். 

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 800 செலுத்தி போட்டுக்கொள்ளவேண்டும் என்பதை ஊடகங்கள் வாயிலாகத் தான் நான் தெரிந்துகொண்டேன். இருப்பினும், தமிழ்நாடு முதலமைச்சர் வாயிலாக மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.   

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget