Coronavirus LIVE Updates: சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 710 பேர் மீது வழக்குப் பதிவு
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,985 (நேற்று 1,997) பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 223 பேரும், ஈரோடில் 198 பேரும், சென்னையில் 194 பேரும், செங்கல்பட்டில் 115 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில்1,839 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,18,777 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர்.
சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,286 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 1316 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3435 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 710 பேர் மீது வழக்குப் பதிவு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 710 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
Coronavirus LIVE Updates: சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தொடர்ந்து தடை
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை,
புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை,
ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை,
ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை,
இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை,
அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை
கொத்தவால் சாவடி மார்கெட்
ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை முதல் (09.08.2021) அடுத்த இரண்டு வாரங்களுக்கு செயல்பட அனுமதியில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.





















