Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் 1908 பேருக்கு கொரோனா 29 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 41 ஆயிரத்து 831 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரத்து 824 நபர்கள் என்று பதிவாகியுள்ளது.
அதேபோல, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரே நாளில் 541 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 258 ஆக பதிவாகியது. இதனால், நாட்டில் தற்போது 4 லட்சத்து 10 ஆயிரத்து 952 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழ்நாட்டில் 1908 பேருக்கு கொரோனா 29 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுநாள்வரையிலான கொரோனா பாதிப்பு 25,65,452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் 23 பேரும் தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் புதிதாக 23,676 பேருக்கு கொரோனா
கேரளாவில் புதிதாக 23,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,626 பேர் குணமடைந்துள்ளனர். 148 பேர் உயிரிழந்துள்ளனர்.





















