Coronavirus LIVE Updates: புதுச்சேரியில் மேலும் 79 பேருக்கு கொரோனா
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
புதுச்சேரியில் மேலும் 79 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,22,282 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 929 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,19,548 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் புதிதாக 36,083 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக 36,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 493 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37,927 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 54,38,46,290 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலகளவில் 20.74 கோடி பேருக்கு கொரோனா
உலகம் முழுவதும் 20.74 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43.66 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 18.59 கோடி பேர் குணமடைந்தனர். அமெரிக்காவில் புதிதாக 70,748 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 257பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒரேநாளில் 31,142 பேர் பாதிக்கப்பட்டனர். 919 பேர் உயிரிழந்தனர்.

