மேலும் அறிய

கோவையில் 474 பேருக்கு கொரோனா தொற்று ; 5 பேர் பலி..!

கோவையை விட ஈரோட்டில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 474 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போது 2996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 857 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 15 ஆயிரத்து 910 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2063 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்

கோவையில் 474 பேருக்கு கொரோனா தொற்று ; 5 பேர் பலி..!

ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 360 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 143 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 4260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையை விட ஈரோட்டில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 6 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 90469 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 85606 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 603 ஆகவும் உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 231 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 308 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1645 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 83354 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 80940  ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 769 ஆகவும் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 34 பேர் குணமடைந்துள்ள நிலையில், 795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவதால், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஐந்து நாட்களாக உயிரிழப்புகள் பதிவாகவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 28604 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27645ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 164 ஆகவும் உள்ளது.

கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள கோவை மண்டலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget