Covid 19: கவனக் குறைவாக இருந்தால் தொற்று பன்மடங்கு அதிகரிக்கும் - ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இருந்தால் தொற்று உறுதியானவர்கள் வீட்டுத்தனிமையில் இருக்கலாம் - ராதா கிருஷ்ணன்
பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருந்தால் தொற்று பாதிப்பு பன்மடங்கு உயரும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று பரவல் குறித்து செய்தியாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இருந்தால் தொற்று உறுதியானவர்கள் வீட்டுத்தனிமையில் இருக்கலாம். தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட யாருக்கும் இதுவரை ஆக்ஸிஜன் உதவி தேவைப்படவில்லை. மூன்றில் இருந்து 6 மாதங்களுக்கு தேவையான ரெம்டெசிவர் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் கையிருப்பில் இருக்கின்றன. பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருந்தால் தொற்று பாதிப்பு பன்மடங்கும் உயரும்’ என்று எச்சரித்துள்ளார்.
#JUSTIN | கவனக்குறைவாக இருந்தால் தொற்று பாதிப்பு பன்மடங்கு உயரும்
— ABP Nadu (@abpnadu) January 5, 2022
- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் https://t.co/wupaoCQKa2 | #Omicron | #Corona | #TNGovt pic.twitter.com/EUHMMwvYYM
மேலும், ‘தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 1.16 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா, ஒமிக்ரான் பரவலை தடுக்கவே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் அனைத்து விதிமுறைகளையும் மக்கள் முறையாக பின்பற்றி, தொற்று பரவல் சங்கிலியை உடைக்க வேண்டும்” என்றும் கூறினார்.
ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கின்போது எதற்கெல்லாம் அனுமதி?https://t.co/wupaoCQKa2 | #TNLockdown | #lockdown | #TNGovt | #Omicron pic.twitter.com/D5jUvCY5x4
— ABP Nadu (@abpnadu) January 5, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )