சேலம் மாவட்டத்தில் புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதி!
சேலம் மாவட்டத்தில் புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1534 ஆக உள்ளது. மேலும் 147 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 89,499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,628 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1,595 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று 5213 பரிசோதிக்கப்பட்டதில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் நாளாக உயிரிழப்பு எதுவும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள 138 மையங்களிலும் இன்று 24,500 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 9 லட்சத்து 49 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு :
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 39 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு. மேலும் 63 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 20 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு . நோயிலிருந்து குணமடைந்த 49 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 401 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்