Long Covid Symptoms : இவைதான் பொதுவான நீண்ட கோவிட் அறிகுறிகள்.. நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் இவை..
Covid-19: தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மிகவும் குறைந்த அளவிலான சதவீதத்தினர் மட்டுமே இந்த நோய்த்தொற்றால் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
long Covid symptoms Covid-19: இது தாங்க பொதுவான கோவிட் அறிகுறிகள் - நிபுணர்கள் அறிக்கை வெளியீடு
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மிகவும் குறைந்த அளவிலான சதவீதத்தினர் மட்டுமே இந்த நோய்த்தொற்றால் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக நீண்ட நாட்களுக்கு கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் என்று கூறுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் சில அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.
கோவிட் தடுப்பூசிகள் செலுத்தி கொள்வதால் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த தடுப்பூசிகள் நீங்கள் கால அறிகுறிகளில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாக்கிறது மற்றும் எவ்வாறு எளிதாக்குகிறது என்பதை கண்டறிவதற்காக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த புதிய ஆய்வின் படி கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கூட லேசான பாதிப்புகளுக்கு நீண்ட நாட்கள் அறிகுறிகளை அனுபவிக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் சில சமயங்களில் இதயம், மூளை, நுரையீரல் அல்லது உடலின் வேறு எந்த ஒரு பாகத்தையும் பாதிக்கும் அல்லது பலவீனமாக்கும் அதனால் நீண்ட நாட்களுக்கு கோவிட் அறிகுறிகளை அனுபவிக்க நேரிடும் என்றுள்ளார்.
நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி குறித்த தகவலில் கோவிட் தடுப்பூசி போடாத நோயாளிகளுடன் ஒப்பிடும்போது கோவிட் ஊசி செலுத்தி கொண்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 34% நீண்ட நாட்களுக்கு கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15% குறைத்துள்ளது என வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களிடையே இரத்த உறைதல் கோளாறுகள் 56 % மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் 49 % குறைந்துள்ளது. இப்படி நீண்ட கால கடுமையான நோய்களை கோவிட் தடுப்பூசிகளால் குறைக்க முடிந்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மும்பையின் மசினா மருத்துவமனையின் மார்பு மருத்துவர் மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் சங்கேத் ஜெயின் கூறுகையில் கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் மிக சிறிய அளவிலான சதவீதத்தினரே நாள்பட்ட கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்.
பொதுவான அறிகுறிகள்
காய்ச்சல், கடுமையான வறட்டு இருமல், மூச்சுத்திணறல், பலவீனம், படபடப்பு, இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், தலைவலி, புஞ்சை தோல் வெடிப்பு, மூக்கு ஒழுகுதல், தும்மல், அடிவயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தசைவலி போன்றவை தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகள் என்கிறார்கள் நிபுணர்கள்.
நீண்டகால அறிகுறிகளான தலைசுற்றல், குமட்டல், கவனமின்மை, சோர்வு, பசியின்மை போன்றவை பொதுவாக வயதானவர்களிடம் காணப்படும். சிலருக்கு நீண்டகால கோவிட் என்பது ஒரு மாதம் ஒரு வருடம் அல்லது இயலாமையையும் ஏற்படுத்தலாம். பொதுவாக நீரிழிவு, எஸ்கிமிக் இதயநோய், நாள்பட்ட சிறுநீரக பிரச்சனை, கீமோதெரபியில் நோய்எதிர்ப்பு குறைவான அளவில் உள்ளவர்கள் பொதுவாக நீண்டகால கோவிட் நோய்க்கு ஆளாகிறார்கள் என கூறப்படுகிறது.