TN Corona Spike: தமிழ்நாட்டில் 2000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. செங்கல்பட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு..
தமிழ்நாட்டில் மேலும் 386 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் 386 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக 386 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 186 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிழிந்துள்ளார். தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் 2,099 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி சிங்கபூரிலிருந்து வந்த இரண்டு பேருக்கும், அரபு நாடு மற்றும் இலங்கையில் இருந்து வந்த 2 என மொத்தம் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,686 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதில் 386 மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. 116 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 688 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் என்பது செங்கல்பட்டில் அதிகமாக காணப்படுகிறது. செங்கல்பட்டில் 12.0 %, சென்னை – 9 %, கோவை – 11.6%, திருவள்ளூர் – 11.6%, திருச்சி – 10%, திருவாரூர் – 9.6% என பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாட்டில் செங்கல்பட்டை சேர்ந்த 63 வயது பெண் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் வந்த 6 கப்பலில் 2447 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் 34 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புவர்களில் சதவீதம் 98.73 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு சதவீதம் 3.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பும் 3.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார துறையின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நேற்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று கிண்டியில் இருக்கும் கிங் மருத்துவமனையில் கொரொனா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )