மேலும் அறிய

Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 28 பேர் உயிரிழப்பு!

 நான்கு நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு குறைந்துள்ளது. 1,45,321 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,957  ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. சில தினங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இன்று பாதிப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 957 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  நான்கு நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு குறைந்துள்ளது. 1,45,321 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,957  ஆக உள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  63 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 521 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 189 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 189  ஆக உள்ளது. 

கோவை 219, ஈரோடு 168, தஞ்சை 123, சேலம் 82, திருப்பூர் 90, செங்கல்பட்டு 127, கடலூர் 60, திருச்சி 75, திருவள்ளூர் 91, நாமக்கல் 54, கள்ளக்குறிச்சி 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,130 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 7 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8321 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக  திருப்பூரில் 5 பேரும், சேலத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 26 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,385 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,068 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,09,029 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதிற்குட்பட்ட 109 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39,443 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24,453 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7516 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs SRH Match Highlights: சென்னையில் எடுபடாத ஹைதராபாத் கேம் ப்ளேன்; 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK இமாலய வெற்றி!
CSK vs SRH Match Highlights: சென்னையில் எடுபடாத ஹைதராபாத் கேம் ப்ளேன்; 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK இமாலய வெற்றி!
Ruturaj Gaikwad: 2 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!
Ruturaj Gaikwad: 2 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video | அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்க போராடிய மக்கள் பதர வைக்கும் வீடியோ காட்சிPremalatha vijayakanth | ”STRONG ROOM மட்டும் போதுமா?தேர்தல் ஆணையம் STRONG-ஆ இருக்கனும்” - பிரேமலதாGukesh meets Stalin | தம்பி குகேஷ்.. வா பா.. சாதித்த இளைஞர் நேரில் வாழ்த்திய முதல்வர்Premalatha Vijayakanth |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs SRH Match Highlights: சென்னையில் எடுபடாத ஹைதராபாத் கேம் ப்ளேன்; 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK இமாலய வெற்றி!
CSK vs SRH Match Highlights: சென்னையில் எடுபடாத ஹைதராபாத் கேம் ப்ளேன்; 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK இமாலய வெற்றி!
Ruturaj Gaikwad: 2 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!
Ruturaj Gaikwad: 2 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
Embed widget