காய்ச்சல் இருக்கும்போது உடலுறவு கொள்வது நல்லதா? ப்ரியமானவளே கதையெல்லாம் உண்மையா?
பெரும்பாலான பேருக்கு காய்ச்சல் இருக்கும்போது உடல் அயர்ச்சி காரணமாக செக்ஸில் ஆர்வம் இருக்காது அல்லது காய்ச்சல் இருக்கும் பார்ட்னருடன் உடலுறவு கொள்வதில் ஆர்வம் இருக்காது.
மழை சீஸன், காய்ச்சலுக்குப் பஞ்சம் இருக்காது, இதே மழை சீஸனில்தான் ‘மழை, இளையராஜா கூடவே கொஞ்சம் காதல்’ என ரொமான்ஸ் செய்யவும் தோன்றும். ஆனால் ஆளாளாக்கு காய்ச்சல் வந்தால் எங்கே ரொமான்ஸ் செய்வது இருவரும் ஒன்றாக அமர்ந்து சுடுநீரில் ஆவிபிடிப்பதுதான் அதிகபட்ச ரொமான்ஸாக இருக்க முடியும். இருந்தாலும் சிலருக்கு இந்த சமயத்தில் காய்ச்சல் இருக்கும்போது செக்ஸ் கொள்ளலாமா என்கிற சந்தேகம் வரும்... பாலியல் நிபுணர்களிடம் பேசினோம்!
உங்கள் பார்ட்னர் என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்!
ஒருவேளை பார்ட்னரில் ஒருவருக்குக் காய்ச்சல் இருந்து அது பாராவயில்லை ஒன்றும் சிக்கலில்லை என மற்றொரு பார்ட்னருக்குத் தோன்றினால் தாராளமாக செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் நிபுணர்களின் முதல் அட்வைஸ்
என்ன மாதிரியான காய்ச்சல்
இருந்தாலும் அது என்ன மாதிரியான காய்ச்சல் என்பதைப் பொருத்து மாறுபடும் என்கிறார்கள். ஒருவேளை உங்களுக்குச் சாதாரண உடல் சூடுதான் என்றால் உடலுறவு வைத்துக்கொள்வதில் சிக்கல் இல்லை. ஆனால் காய்ச்சலுடன், சளி இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும்போது அவை எச்சில் வியர்வை போன்ற ஊடுகள் வழியாகப் பரவதான் வாய்ப்புகள் அதிகம்.
அதனால் அந்த சமயங்களில் செக்ஸை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக குளிர்காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் போன்றவை உடலுக்கு மிகமிக ஆபத்தானது. அந்த சமயங்களில் உங்கள் பார்ட்னரிடமிருந்து பத்து அடி தள்ளி இருப்பது அட்வைஸ் செய்யப்படுகிறது.
காய்ச்சல் நேரத்தில் செக்ஸ் பாதிப்பு ஏற்படுத்துமா?
சிலருக்கு காய்ச்சல் நேரத்தில் உடலுறவுகொள்ள ஆர்வம் இருந்தாலும் உடல் அதற்கு ஏற்றது போல ஒத்துழைக்காது. செக்ஸ் வைத்துக்கொள்ளும் நிலையில் உடல் எளிதில் நீர்ச்சத்தை இழக்கும், சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும். காய்ச்சலும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதும் நல்ல செய்தியே கிடையாது. உங்கள் உடலில் எதிர்ப்பு சத்து எப்படி என்பதைப் பொறுத்து உடலுறவு கொள்வது பற்றி முடிவு செய்யலாம்.
பார்ட்னரின் உடல்நிலை எப்படி?
ஒருவேளை உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் ஒரே மாதிரியான காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அப்போது செக்ஸ் வைத்துக்கொள்வதில் பார்ட்னருக்கு ஆபத்து இல்லை. ஆனால் பார்ட்னருக்கு எதிர்ப்பு சத்து குறைவு எளிதில் காய்ச்சல் தொற்றிக் கொள்பவர் என்றால் செக்ஸை தவிர்க்கவும். அந்த நேரங்களில் உடலுறவுக்கு பதிலாக ஒரு தேநீர் கோப்பையுடன் இருவரும் அமர்ந்து பரஸ்பரம் மனதார உரையாடுவது கூட ஒருவகையில் ரொமான்ஸ்தான் என அட்வைஸ் செய்கிறார் பாலியல் நிபுணர்.
பெரும்பாலான பேருக்கு காய்ச்சல் இருக்கும்போது உடல் அயர்ச்சி காரணமாக செக்ஸில் ஆர்வம் இருக்காது அல்லது காய்ச்சல் இருக்கும் பார்ட்னருடன் உடலுறவு கொள்வதில் ஆர்வம் இருக்காது. இது இரண்டில் எதுவாக இருந்தாலும் உங்கள் பார்ட்னரிடம் கம்யூனிக்கேட் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )