Breast Feed: பெண்களே.. தாய்ப்பால் தடையின்றி சுரக்க வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்க..!
தாய்ப்பால் தடையின்றி நன்றாக சுரக்க பெண்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்பதை கீழே காணலாம்.

தாய்மை என்பது எப்போதும் போற்றப்படும் புனிதமாகவே கருதப்படுகிறது. ஒரு குழந்தைக்கும், தாய்க்குமான உறவை மேலும் உன்னதமாக்கும் பாலமாக இருப்பது தாய்ப்பால் ஆகும். ஒரு குழந்தை பிறந்தது முதல் அடுத்த சில மாதங்களுக்கு குழந்தைக்கான ஆகாரமாக தாய்ப்பாலே உள்ளது.
இன்றைய காலத்தில் உணவுப்பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தை பெற்ற தாய்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல்கள் உள்ளது. அந்த சிரமங்களை கடந்து அவர்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு கீழே கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து நிபுணர் சினேகா அளித்துள்ள பரிந்துரையின்படி,
1. வெந்தயம்:
மிகுந்த மருத்துவ குணம் கொண்டது வெந்தயம். பல மருத்துவ குணம் கொண்ட வெந்தயம் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவுகிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதில் நிறைந்துள்ளது. வெந்தயக்கீரை, வெந்தய கஞ்சி, வெந்தய குழம்பு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவது தாய்ப்பாலை அதிகரிக்க வைக்கும். இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து உள்ளது.
2. பெருஞ்சீரகம்:
மருத்துவ உலகில் சிறந்த மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுவது இந்த பெருஞ்சீரகம். இதில் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டும் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது. வாயு மற்றும் வயிற்றுப்பிடிப்பை இது குணப்படுத்தும்.
3. பூண்டு:
ஏராளமான மருத்துவ குணம் கொண்டது பூண்டு. பூண்டில் உள்ள அல்லிசின் தாய்ப்பால் சுரப்பை அதிகளவு தூண்டுகிறது. இதனால், தாய்மார்கள் உணவில் பூண்டைச் சேர்த்துக் கொள்வது நல்லது ஆகும். மேலும், வயிற்றுச் செரிமானத்திற்கும் பூண்டு நல்லது ஆகும்.
4. எள்:
எள் என்பது மிகுந்த பயனுள்ள ஒன்றாகும். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏராளமான நன்மைகளை பயக்கும் ஒன்றாகும். கால்சியம், இரும்பு, மெக்னீசியம், செலீனியம், ஒமேகா 6, கொழுப்புச்சத்து போன்றவை எள்ளில் உள்ளது. இது ஒரு தாய்க்கு மிக மிக அவசியமானது ஆகும். கால்சியமும், மெக்னீசியமும் பால் சுரப்பைத் தூண்டும்.
மேலே கூறியவற்றை தொடர்ச்சியாக மருத்துவர்களின் பரிந்துரையின்படி உட்கொண்டால் தாய்ப்பால் சுரப்பது நன்றாக அதிகரிக்கும். ஏனென்றால், தாய்ப்பாலில் இருக்கும் ஆரோக்கியமும், சத்தும் ஒரு குழந்தையை மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
இது தவிர, இரும்புச்சத்து, கால்சியம் ஃபோலிக், அமிலம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடெண்ட்கள் கொண்ட கறிவேப்பிலை, முருங்கை, பசலைக்கீரை, வெந்தயக்கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து போன்றவை தாய்ப்பால் சுரப்பை மேலும் அதிகரிக்க உதவும். இதுதவிர பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவதும் நல்லது ஆகும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு உடலில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மருத்துவர்களின் பரிந்துரையின்படி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், தகவல்களுக்கு snekasiva3007@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















