மார்பக புற்றுநோய்: அதிர்ச்சி தரும் ஆய்வு! தவறான பரிசோதனைகள், தாமதமான சிகிச்சை - உண்மை என்ன?
நுரையீரல் புற்றுநோய், வாய் தொடர்பான புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய் ஆகிய 5 புற்றுநோய் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது.
மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நுரையீரல் புற்றுநோய், வாய் தொடர்பான புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய் ஆகிய 5 புற்றுநோய் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்த மார்பக புற்றுநோய் தவிர மற்ற புற்று நோய்கள் அனைத்தும் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் வரும். ஆனால் , மார்பக புற்றுநோய் பெண்களை மட்டுமே அதிக அளவில் பாதிக்கும். மார்பகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இன்றி பெருகும் நிலையில் புற்றுநோய் கட்டி ஏற்படுகிறது.
பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர தொடங்கும். 60 வயதுக்கு மேல் எட்டில் ஒரு பெண்ணுக்கு இந்த மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் புற்றுநோயால் இறக்கும் 70 சதவீத பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு செல்வதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை மார்பக மையம் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மார்பக பரிசோதனை தொடர்பான விழிப்புணர்வு சமூகத்தில் குறைவாக உள்ளது. ஓரளவு புரிதல் உள்ளவர்கள் கூட மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளும் போது சில விஷயங்களை கவனிக்க மறந்து விடுகின்றன. இதனால் நான்கில் ஒருவருக்கு தவறான முடிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை மார்பக மையத்தின் சார்பில் கடந்த ஆண்டில் 12 வயது முதல் 93 வயது வரை உள்ள 12,156 பேரிடம் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நோயாளிகளின் உடல்நிலை , மருத்துவ தரவுகள், பரிசோதனை விவரங்கள் அதன் முடிவுகள் என அனைத்து நிலையிலான தகவல்களும் அப்போது மதிப்பீடு செய்யப்பட்டன. குறிப்பாக ரத்தப் பரிசோதனை, திசு பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகளை தனித்தனியாக வெவ்வேறு ஆய்வகங்களில் மேற்கொள்ளும் போது அதன் முடிவுகள் தவறாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெவ்வேறு ஆய்வகங்களில் மார்பக திசு பரிசோதனை செய்தவர்களில் 25 சதவீதம் பேருக்கு அந்த முடிவுகள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தன. அதனால் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டி இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதாவது மொத்தம் இருந்த 12,156 நோயாளிகளில் 479 பேர் திசு பரிசோதனை செய்திருந்தனர். அவர்களில் 120 பேருக்கு மேல் மீண்டும் பையாக் சோதனை தேவைப்பட்டது. அவ்வாறு மேற்கொண்ட போது அதில் 75 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 37.5% பேருக்கு சாதாரண கட்டி என்பது தெரிய வந்தது. அதேபோன்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 50 சதவீதம் பேரின் முடிவுகளும் முரணாக இருந்தன. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்களுக்கு முறையாக மேமோகிராம் பரிசோதனை செய்யவில்லை என்பதும் ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது மார்பக கட்டிக்காக ஒரு சிறிய மருத்துவமனை அல்லது கிளினிக் செல்லும்போது அங்கிருந்து ஸ்கேன் செய்ய ஒரு இடத்திற்கு திசு பரிசோதனைக்கு மற்றொரு இடத்திற்கு நோயாளிகள் அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அலைக்கழிக்கப்படும்போது ஒவ்வொரு இடத்திலும் காத்திருக்கவும் மன உளைச்சலுக்கு உள்ளாகவும் நேரிடுகிறது. அது மட்டுமில்லாமல் பரிசோதனை முடிவுகள் தவறாகி நோயாளியின் வாழ்க்கையை மாற்றி விடுகிறது. இதற்கு ஒரே தீர்வு ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களுக்கு மக்கள் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அந்த மையத்தில் மருத்துவரின் நேரடி பரிசோதனை ஸ்கேன் மற்றும் திசு பரிசோதனை ஆகிய மூன்றையும் சராசரியாக 12 நிமிடங்களில் மேற்கொண்டு விடலாம். திசு பரிசோதனை முடிவுகள் 72 மணி நேரத்திற்குள் கிடைத்துவிடும் இதன் மூலம் சிகிச்சையை தொடங்க வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. இரண்டு அல்லது மூன்றாவது முறை மருத்துவமனைக்கு செல்லும்போது முறையான சிகிச்சையை தொடங்கி விடலாம் என்று கூறினார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















