Sadhguru Speech: இப்படி சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க.. சத்குரு கொடுத்த நான்கு டிப்ஸ் இதுதான்
உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு சத்குரு அளிக்கும் 4 டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
உணவு எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு சத்குரு அளிக்கு 4 டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
உணவை தொட்டு பாருங்கள்:-
உங்களின் கைகளின் சுத்தம் உங்களிடம் இருக்கிறது. ஆனால் நீங்கள் உபயோகப்படுத்தும் கரண்டியின் சுத்தம் உங்களிடம் இல்லை.
நமது முன்னால் உணவு வந்தால், அதை உணர்வதற்காக நாம் அதை தொட்டுப்பார்க்க வேண்டும். அந்த உணவை நீங்கள் தொட்டுப் பார்க்கவில்லை என்றாலும் அந்த உணவு பற்றிய விழிப்புணர்வோடு உங்களிடம் இருக்கும் பட்சத்தில், அந்த உணவை இன்று எடுத்துக்கொள்ளவேண்டுமா, வேண்டாமா என்பது தெரிந்து விடும். காரணம் நமது உடல் எல்லா நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
நன்றியுணர்வுடன் உண்ணுதல்:
நீங்கள் சாப்பிடக்கூடிய உணவை நீங்கள் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் போல எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதும் அதே அளவுக்கு முக்கியம். உணவு என்பது உங்கள் உயிரை உருவாக்கும் பதார்த்தம். அதனால் அதே கண்ணோட்டத்துடன் அதை அணுக வேண்டும். அதனால் அதை மிகவும் மரியாதையோடு நடத்துவது மிக முக்கியமானது. நீங்கள் உணவு சாப்பிடும் விதத்தை மாற்றிவிட்டால் போது, அது உங்களுக்குள் வேறுவிதமாக செயல்படும். அதனால் அந்த உணவை மரியாதையுடனும், நன்றியுணர்வுடனும் நடத்துவது மிகவும் முக்கியம்.
நல்ல உணவு பழக்கங்களை உருவாக்காதீர்கள்:
நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் என்று இங்கு எதுவுமில்லை. பழக்கம் என்று சொன்னாலே நீங்கள் விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். நீங்கள் விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டீர்கள் என்றால் செயல்பட்டால் அதுதான் கெட்ட விஷயமே. காரணம் மனிதனுக்கு இருக்கும் முக்கியத்துமே நம்மால் விழிப்புணர்வுடன் செயலாற்ற முடியும் என்பதுதான். விழிப்புணர்வாக ஒரு மனிதர் பேசுவதால், நடப்பதால் அவர் அழகான மனிதராக மாறுகிறார்.
நாம் சாப்பிடுகிற உணவுதான் நமது உடலை கட்டமைக்கும். அதுதான் கட்டுமான பொருள். பாரம்பரியமாக நமது நாட்டில் நாம் புத்திசாலித்தனமாக சாப்பிட்டோம். ஆனா காலப்போக்கில் நிறைய உணவுகள் உள்ளே வந்துவிட்டது. எது உகந்த உணவு என்பதை தெரிந்துகொள்ள நேரம் வந்துவிட்டது.
நீங்கள் சாப்பிடுகிற உணவை நீங்கள் நாக்கால் சோதிக்கக் கூடாது. உடம்பால் சோதிக்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவிற்கு பிறகு உங்கள் உணவு எவ்வளவு சுறுசுறுப்பாய் இயங்குகிறது என்பதை பாருங்கள். நீங்கள் உயிரோட்டமாக உணர்ந்தால் அது நல்ல உணவு என்று அர்த்தம். மந்தமாக உணர்ந்தால், அந்த உணவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
இருவேளை உணவு:
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது தற்போது மேலை நாடுகளில் பிரபலமாகி வருகிறது. இப்போது எல்லாருமே சாப்பிடுகிற உணவு இடைவேளை 14 மணி நேர இடைவெளியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்
அப்படி இருந்தால் எல்லா நோய்களும் போய்விடும் என்று சொல்கிறார்கள். காலி வயிறோடு இருப்பது நல்லது. நமது வயிறு காலியாக இருக்கும் போதுதான் உங்கள் உடலும், மூளையும் சிறப்பாக வேலை செய்கிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )