மேலும் அறிய

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: நாளை போக்குவரத்து மாற்றம் - முழு விவரம் உள்ளே

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு , சென்னையில் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ( 31.08.25 ) கரைக்கப்பட இருக்கிறது. சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் பக்தர்களால் கடற்கரைப் பகுதியில் உள்ள தீர்மானிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

சென்னையில் நான்கு இடங்கள் ; 

1.ஶ்ரீனிவாசபுரம் - மயிலாப்பூர்

2. பல்கலை நகர் – திருவான்மியூர்               

3. N 4 மீன்பிடி துறைமுகம் – புது வண்ணாரப்பேட்டை 

4. பாப்புலர் எடை மேடை – திருவெற்றியூர்

காவல் துறையினரின் போக்குவரத்து ஏற்பாடுகள்

விநாயகர் சிலைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுடன் , பாதசாரிகளின் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே , போக்குவரத்தின் அளவைப் பொறுத்து பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட உள்ளன.

1. திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால் , காந்தி சிலை , ஆர்.கே. சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம். தெரு, லஸ் ஜங்சன்,  அமிர்தாஞ்சன் சந்திப்பு , டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர். ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே. மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

2. அடையாறிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் தெரு ( இடது புறம் திரும்பி ), வி.கே. ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே. மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே. சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

3. சிலை ஊர்வலம் ரத்னா கஃபே சந்திப்பைக் கடக்கும் போதெல்லாம், ஜாம் பஜார் காவல் நிலையத்திலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக , இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4. சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும் போதெல்லாம், ஐஸ் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு - காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் GRH சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.

5. அதே போல் , சிலையை கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே கலங்கரை விளக்கத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம் சிலை கரைக்கும் இடத்திற்கு லூப் சாலை வழியாக அனுமதிக்கப்படும்.

6. விநாயகர் சிலையினை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்! குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரூ.2,185 கோடி... வருகிறது புதிய ‘ரிங் மெயின்’ திட்டம்!
சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்! குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரூ.2,185 கோடி... வருகிறது புதிய ‘ரிங் மெயின்’ திட்டம்!
காஞ்சிபுரத்தில் அசத்தும் ‘ஏரோஹப்’! ரூ.250 கோடி முதலீடு... 2,000 பேருக்கு வேலை!
காஞ்சிபுரத்தில் அசத்தும் ‘ஏரோஹப்’! ரூ.250 கோடி முதலீடு... 2,000 பேருக்கு வேலை!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று இரவு என்ன நடக்கப் போகிறது தெரியுமா?
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று இரவு என்ன நடக்கப் போகிறது தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget