Car Discount: பண்டிகை கால சலுகை! மாருதி முதல் MG வரை.. 6 லட்சம் வரை தள்ளுபடி.. இதோ விவரம்
முக்கிய நிறுவனங்களான மாருதி சுசுகி, ஹூண்டாய், ஹோண்டா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் போன்ற பெரிய கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க 6 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள பல்வேறு கார் நிறுவனங்கள் பல தள்ளுபடிகளை வழங்கி வருகிறது, அந்த வகையில் முக்கிய நிறுவனங்களான மாருதி சுசுகி, ஹூண்டாய், ஹோண்டா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் போன்ற பெரிய கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க 6 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.
எம்ஜி மோட்டார்ஸ்:
MG மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான மாடல்களான Comet EV, ZS EV, Astor, Hector மற்றும் Gloster ஆகியவற்றில் சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. Comet EV-யில் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.56,000 தள்ளுபடி பெறுகின்றனர், அதே நேரத்தில் ZS EV மற்றும் Astor-ல் ரூ.1.10 லட்சம் வரை சேமிக்க முடியும். Hector வாங்குபவர்களுக்கு, நிறுவனம் ரூ.1.15 லட்சம் வரை கூடுதல் ரொக்க போனஸை வழங்குகிறது. அதே நேரத்தில், MG மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொகுசு SUV Gloster-ல் மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் ரூ.6 லட்சம் வரை தள்ளுபடி பெறுகின்றனர்.
தி கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்:
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் ஆகஸ்ட் 2025 இல் "தி கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்டை" கொண்டாடுகிறது. இந்த நேரத்தில், ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி மற்றும் எலிவேட் போன்ற மாடல்களுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா சிட்டியில் ரூ.1.07 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ஹைப்ரிட் மாடலான சிட்டி இ:ஹெச்இவியில் ரூ.96,000 வரை வழங்கப்படுகிறது. ஹோண்டா எலிவேட்டின் டாப்-எண்ட் ZX மாடல் அதிகபட்ச தள்ளுபடியை வழங்குகிறது, இதில் ரூ.1.22 லட்சம் வரை சலுகையும் அடங்கும். இது தவிர, இரண்டாம் தலைமுறை அமேஸில் வாடிக்கையாளர்கள் ரூ.77,200 வரை தள்ளுபடியையும் பெறுகிறார்கள்.
மாருதி சுசுகி பண்டிகை சலுகைகள்
மாருதி சுசுகி தனது பிரபலமான பல மாடல்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது. ஜிம்னியின் ஆல்பா வேரியண்டிற்கு மாருதி நிறுவனம் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஸ்விஃப்ட் ஏஎம்டி வேரியண்டில் ரூ.1.1 லட்சம் வரையிலும், வேகன்ஆர் எல்எக்ஸ்ஐயில் ரூ.1.15 லட்சம் வரையிலும் தள்ளுபடியாக உள்ளது. அதே நேரத்தில், எம்பிவி இன்விக்டோவில் ரூ.1.25 லட்சம் மற்றும் எஸ்யூவி கிராண்ட் விட்டாராவில் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் கார்கள் சலுகைகள்
ஹூண்டாய் நிறுவனமும் தள்ளுபடி தவறவில்லை,. கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆக்சென்ட் கார்களுக்கு ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.25,000 வரை கூடுதல் தள்ளுபடியை வழங்குகிறது. இது தவிர, ஹூண்டாய் டக்சன், அல்காசர், க்ரெட்டா மற்றும் வெர்னா கார்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் ஐயோனிக் 2024 மாடலுக்கு ரூ.4 லட்சம் வரை நேரடி ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது.
காரை வாங்குவதற்கு முன் வாடிக்கையாளர் தங்களது ஊரில் உள்ள டீலரிடமிருந்து தள்ளுபடி குறித்த சரியான தகவலைப் பெறுவது முக்கியம் சலுகையின் அளவு வெவ்வேறு இடங்கள் மற்றும் டீலர்ஷிப்களில் மாறக்கூடும்.






















