புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு: கடற்கரையில் குவிந்த மக்கள்!
புதுச்சேரி கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைத்த பொதுமக்கள். போலீசார் பலத்த பாதுகாப்பு.

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடபட்ட நிலையில் இரண்டாம் நாளான நேற்று பொதுமக்கள் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்
கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைத்த பொதுமக்கள்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. வீடுகளில், மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, அலங்காரம் செய்து, மக்கள் வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
புதுச்சேரியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று முன்தினம் பொது இடங்கள், கோவில்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடந்தது. புதுச்சேரியில் முக்கிய இடங்களில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 5ம் நாளான 31ம் தேதி அன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பழைய துறைமுகம் அருகே கடற்கரையில் கரைக்கப்படும். இதற்கிடையே பொது மக்கள் வீடுகளில் வழிபட்ட சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகளை நேற்று மாலை தலைமை செயலகம் எதிரே உள்ள கடலில் கரைத்தனர்.
தமிழகம் முழுவதும் 35,000 விநாயகர் சிலைகள்
போலீசாரின் அனுமதியுடன், மாநிலம் முழுதும், 35,000 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. சிலைகள் பாதுகாப்பு பணியில், 65,000 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். சிலைகள் இருக்கும் இடங்களில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
விநாயகர் சிலைகளுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா குழுவினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைக்க, போலீசார் அனுமதி அளித்துள்ளனர். விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க, வரும், 11, 14 மற்றும் 15ம் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல, போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.
மதுக்கடைகள், மதுபார்கள் மூடல்
புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் இருந்து தொடங்கி காமராஜர் சாலை, நேருவீதி, காந்திவீதி, அதிதி ஓட்டல் சந்திப்பு, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை காந்திசாலையை அடைகிறது. எனவே அந்த வழியில் உள்ள மதுக்கடைகள், மதுபார்கள், மது விற்பனை செய்ய உரிமம் பெற்ற ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் வருகிற 31-ந்தேதி மூட வேண்டும். இதற்கான உத்தரவை புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட சிலைகள்
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு பல்வேறு இந்து அமைப்பினர் செயலய்படுதி வருகின்றனார் . அதாவது ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிறிய அளவிலான சிலைகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வாங்கிச்செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 1,650 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது.
4 அடிக்கு மேல் உயரமுள்ள சிலைகளை வழிபாட்டுக்குழுவினர் முன்னதாகவே ஆர்டர் கொடுத்து வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். சதுர்த்தி விழா முடிவடைந்த பின்னர் முன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம்.
விநாயகர் சிலை கரைப்பதற்கு போலீசார் ஏற்பாடு
அதற்காக கிழக்கு கடற்கரை மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரையுள்ள இடங்களான பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் வசவன் குப்பம், தந்திராயன் குப்பம் மற்றும் அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் குளம், வீடூர் அணை ஆகிய இடங்களில் மட்டுமே கரைப்பதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதோடு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.





















