Tamizha Tamizha: தாலியை கழட்டி வீசிய மாமியார்.. அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்.. தமிழா தமிழா நிகழ்ச்சியில் பரபரப்பு
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தாலியை கழட்டி எரியும் ப்ரோமோ வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கணவன் மனைவி, இளையதலைமுறை, 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் போன்ற கலகலப்பை ஏற்படுத்தும் தலைப்புகளை வைத்து விவாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று சாதி, மதம் குறித்து மக்களிடம் நல்ல புரிதலை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்களும் ஆரோக்கியமான முறையில் விவாதம் செய்வார்கள்.
தமிழா தமிழா நிகழ்ச்சி
சில நேரங்களில் ரத்தம் சிந்தாமல் வாய்த்தகராறு முற்றிய நிலையில் சண்டை போட்டுக்கொள்வது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் தமிழா தமிழாவில் கலகலப்பான மாமியார் மற்றும் கண்டிப்பான மாமியார் என்ற தலைப்பில் பேசும் மேடையாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்குகிறார். வரும் 14ஆம் தேதி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கண்டிப்பான மாமியாரின் பக்கம் இருந்த பெண் ஒருவர் பேசுகையில், காலையில் குளிச்சிட்டு தான் சமையலறைக்குள் அனுமதிப்பேன். எனக்கு சுத்தமாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
கண்டிப்பான மாமியார், கலகலப்பான மாமியார்
அதைத்தொடர்ந்து மற்றொருவர் பேசுகையில் எனக்கு சுடிதார், நைட்டி போடுவதில் சிக்கல் இல்லை. ஆனால், வெள்ளிக்கிழமை கண்டிப்பா சேலை கட்டித்தான் ஆக வேண்டும். அதில் மாற்றம் இல்லை எனக் கூறுகிறார். அப்போது கலகலப்பான மாமியார் பக்கம் இருந்த பெண்களில் ஒருவர், நாம பட்ட கஸ்டத்தை நம்ம மருகமகள் படக்கூடாது. அதுதான் என் கருத்து என்கிறார். அதற்கு கண்டிப்பான பக்கம் இருப்பவர், நவ நாகரீகமாக இருக்கும் மருமகள் எனக்கு வேண்டாம். உடம்பு தெரியும்படி ஆடை அணிந்து நடமாடுவதில் எனக்கு இஸ்டம் இல்லை என்கிறார். பிறகு கலகலப்பான பக்கம் பேசிய ஒருவர், ஒரு பெண் உடை, நடை கண்காணிப்பது தவறு. அவளுக்கான ப்ரீடத்தைை அவள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
தாலியை கழட்டி வீசிய பெண்
அப்போது, கண்டிப்பான மாமியார் பக்கம் பேசிய பெண் ஒருவர், ஒரு பெண்ணிற்கு அடையாளம் தாலி தானே. தாலி இல்லாமல் எப்படி சார் வாழ்க்கை என கேட்டதும், கலகப்பான மாமியார் கண்டிப்பான வாதத்திற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி வீசி 'நான் இப்போ தாலிய கழட்டி வீசிட்டன் இப்போ என் புருஷனுக்கு ஏதாவது ஆக போகுதா' என ஆதங்கத்தில் கத்தினார். இதை பார்த்து அரங்கத்தில் இருந்த அனைவரும் ஒருநிமிடம் அமைதியானார்கள். தாலியை வைத்து வேலி தாண்ட கூடாது என்ற கதை இங்கே பேசாதீங்க. ஏமாத்த நினைக்காதீங்க என்று தெரிவித்தார். தற்போது இதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















