மேலும் அறிய

Actor Kavin: சிவகார்த்திகேயன் இடத்துக்கு டார்கெட்.. கவினை உயர்த்தப்போகும் 5 இயக்குநர்கள்.. லிஸ்ட் இதோ..!

டாடா படத்தின் வெற்றி இளம் நடிகர் கவினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், அடுத்தடுத்து அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

டாடா படத்தின் வெற்றி இளம் நடிகர் கவினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், அடுத்தடுத்து அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

 விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் கலையுலகில் எண்ட்ரீ கொடுத்தவர் கவின். நடிப்பின் மீதிருந்த ஆர்வம் காரணமாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்த நிலையில், அவரை சரவணன் மீனாட்சி சீரியல் தான் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. அதில் முதல் சீசனில்  முதல் சீசனில் முருகன் என்னும் கேரக்டரிலும், 2வது சீசனில் வேட்டையன் என்ற கேரக்டரில் நடித்த கவின் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். 

அப்படியான கவினுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் தனி ரசிகர் கூட்டமே உருவானது. 2012 ஆம் ஆண்டு பீட்சா, 2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை, 2017 ஆம் ஆண்டு சத்ரியன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்த அவர் 2019 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ படத்தில் முதன்மை கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து ஓடிடியில் வெளியான லிஃப்ட் படம் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. 

இதையும் படிங்க: Iraivan Movie Review: தியேட்டரை அலற வைக்கும் சைக்கோ த்ரில்லர்.. ஜெயம் ரவி ஜெயித்தாரா.. 'இறைவன் ' பட முழு விமர்சனம்!

இப்படியான நிலையில் நடப்பாண்டு மார்ச் மாதம் “டாடா” படம் வெளியானது. கவினின் கேரியரை அப்படத்தின் வெற்றி தான் கவினை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. அதாவது அவர் அடுத்ததாக 5 படங்களில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

அதன்படி, ஹரிஷ் கல்யாண் நடித்த  'பியார் பிரேமா காதல்' படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' என்ற படத்தில் கவின் நடித்துள்ளார். தொடர்ந்து நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் கவின் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஹீரோயினாக அயோத்தி படம்  மூலம் ரசிகர்களை கவர்ந்த  ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார் என்பதால் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி விட்டது. இந்த படத்தில் கவின் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்பது கிட்டதட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இயக்குநர் நெல்சனின் உதவி இயக்குநராக இருந்த சிவபாலனும் இயக்குநராக மாற, அந்த படத்தை நெல்சனே தயாரிக்கிறார். இதிலும் கவின் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவற்றையெல்லாம் விட மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் கவின்  நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் தகவலும் வரும் காலத்தில் மிகப்பெரிய இடத்தை திரைத்துறையில் பிடிப்பார் என்பது நிதர்சனம். அதேபோல் இவரின் வளர்ச்சி என்பது சிவகார்த்திகேயனின் கேரியரைப் போன்று வளருவதால் கண்டிப்பாக அவருக்கு இணையான ஒரு இடத்தை கவின் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: Chandramukhi 2 Review: வேட்டையன் கேரக்டரில் ட்விஸ்ட் வைத்த பி.வாசு.. சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Embed widget