Samantha: யசோதாவுக்காக களமிறங்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்..! மாஸ் காட்டத்தயாராகும் சமந்தா!!
சமந்தாவுடன் நடிகர் வரலட்சுமியின் அண்மையில் திரைப்படக் குழுவுடன் இணைந்துள்ளார்.
நடிகர் சமந்தா ருத் பிரபு நடிக்கும் அடுத்த படமான யசோதா, ஹரிசங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் சமந்தாவுடன் நடிகர் வரலட்சுமியின் அண்மையில் திரைப்படக் குழுவுடன் இணைந்துள்ளார். இதற்கிடையே தற்போது படத்துக்கான ஸ்டண்ட் காட்சிகளுக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் இந்த படத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
Hollywood Action Choreographer @YannickBen2 roped in for @Samanthaprabhu2's exciting Action Thriller #Yashoda 🔥
— Ramesh Bala (@rameshlaus) March 19, 2022
A @krishnasivalenk's proud production 💥@hareeshnarayan @dirharishankar @varusarath5 @Iamunnimukundan @mynnasukumar @SrideviMovieOff @PulagamOfficial @DoneChannel1 pic.twitter.com/8vAW6OvBTE
அண்மையில்தான் சமந்தா நடிப்பில் உருவாகிவரும் சகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் நாகசைதன்யாவுடனான மன உறவை முறித்துக்கொண்ட சமந்தா தொடர்ச்சியாக படங்களில் பிசியாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
சமீபத்தில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பாடல் என்றால், ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றீயா’ பாடல். படம் வெளியாவதற்கு முன்பே பாடல் செம ஹிட்டடித்து. முக்கியமாக சமந்தா இந்த பாடலுக்கு ஆடுகிறார் என்ற தகவல் வெளியானபோதே, பாடலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. பாடலும் எதிர்பார்ப்பை மீறி நன்றாக இருந்ததால், பட்டிதொட்டியெல்லாம் பாடல் பட்டையை கிளப்பியது.
ஏற்கெனவே, தென்னிந்தியா வரை மூலம் பிரபலமடைந்திருந்த சமந்தா, இந்த பாடல் மூலம் உலகம் முழுவதும் தெரிந்தார். இந்தப்பாடலுக்கு சமந்தா போல் நடனம் ஆடி பல வெளிநாட்டினவர்களும் வீடியோ வெளியிட்டனர். தமிழில் ‘ஓ சொல்றீயா’ , தெலுங்கில் ‘ஊ அண்டாவா’ என இடம்பெற்ற பாடலுக்கு டிஎஸ்பி இசையை தெறிவிட்டிருப்பார். பாடல் வெளியானதும் சமந்தா நடனம் ஒருபக்கம் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது என்றால் மற்றோரு பக்கம் பாடல் வரிகளும் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.