Vijay Hari Combo: விஜய்யிடம் கதை சொல்லியிருக்கேன் - ரகசியத்தை உடைத்த இயக்குநர் ஹரி
யானை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய்யிடம் கதை சொல்லியிருக்கேன் என்று யானை பட இயக்குநர் ஹரி என ரகசியத்தை உடைத்துள்ளார்
விஜய்யிடம் கதை சொல்லியிருக்கேன்:
இயக்குநர் ஹரியிடம், நடிகர் விஜயை வைத்து படம் இயக்குவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் ஹரி, எப்போதும் நானும் விஜய்யும் சந்திப்போம், கதை குறித்து பேசியிருக்கோம், நேரம் வரும்போது நடக்கும் என தெரிவித்தார். விஜய்யிடம் மட்டுமல்ல பல நடிகர்களிடம் கதை குறித்து பேசியிருக்கேன். கதை சொல்வது பெரிய விசயம் என்று நினைத்து கொண்டே இருந்தால் பழசாகி கொண்டே இருப்போம். புதுமையாக முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
யானை படம் எப்படி இருக்கு: ரசிகர்கள் விமர்சனம்:
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உயர்ந்து வரும் நடிகர் அருண் விஜய் முதன்முதலாக தனது அக்கா கணவரான இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடித்துள்ள படம் “யானை”. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் முதலில் இந்த படம் மே 6 ஆம் தேதியும், பின் ஜூன் 17 ஆம் தேதி ரிலீசாவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கமலின் விக்ரம் படம் வெளியாகி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதால் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1 ஆம் தேதி தள்ளிப் போனது. இந்நிலையில் இன்று சுமார் 1500 திரையரங்குகளில் யானை படம் வெளியாகியுள்ளது. காலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் படம் குறித்த விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஹரி நடிப்பில், நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை படம் குறித்து கலவையான விமர்சனங்களை ட்விட்டர் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
#யானை ஸ்க்ரீன் ப்ளே ராக்கெட் வேகத்தில் போகுது 🔥🚀🔥#Rocketry கதை #யானை மாதிரி நகருது...😴
— | கனவே | (@kanavey) July 1, 2022
எனக்கென்னமோ இந்த twitter சந்து-ல எல்லாரும், "யானை" படத்தை வெற்றிப்படமாக்க முடிவு பண்ணிட்டானுக-னு தோணுது... காலைலயிருந்து ஆகா-ன்றானுக ஓஹோ-ன்றானுக...
— அரஃபாத் (@ravuthar_) July 1, 2022
எதனாலையா இருக்கும், ஒன்னும் விளங்கலையே 🤔... #Yaanai #யானை @arunvijayno1 @priya_Bshankar @Ammu_Abhirami @DirectorHari_
@newrajamani to day Release முழுக்க முழுக்க கமர்ஷியல் மாஸ் ஹீரோவாக மாறிய அருண் விஜய், ஆக்ஷன் காட்சிகள், டயலாக் டெலிவரி, எமோஷன் காட்சிகள் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார்.#யானை ஏ.வி.யின் கமர்ஷியல் ஹீரோவாக சிறந்த நடிப்பு... @arunvijayno1 @priya_Bshankar @DrumsticksProd pic.twitter.com/7YD2HKeMLP
— New Rajamani Cinemas AC DTS 7.1.Sound System Pkt (@NewRajamani) July 1, 2022
#யானை படம் முதல்ல சொன்ன ஜுன் 17 லயே ரிலீஸ் ஆகி இருந்தா விக்ரம் படத்த தூக்கி போட்டு நசுக்கி இருக்கும்.ஏதோ ஹரி கமல் கேட்டுக்கிட்டதால் ரிலீஸை ரெண்டு வாரம் தள்ளி வச்சு புண்ணியம் தேடிக்கிட்டாரு🚶🚶
— s𝓾Ⓟєʀ⭐_ʀค𝕁ɪภɪᴶᴬᴵᴸᴱᴿ ▄▀▄▀▄▀ (@Rajini_2020) July 1, 2022
#Yaanai #யானை released July 1, 2022🐘✨
— Ragu (@Ragunanthen1992) July 1, 2022
Good Family Entertainer #Hari 🎬👍🏻
Family Sentiment worked well💯 #DirectorHARI's Fort✍️🏻💖 + Mass fight scenes🔥#ArunVijay Terrific💪🏻 #PriyaBhavaniShankar 😍#YogiBabu 👍🏻 #GVPrakash🎼👍🏻@arunvijayno1 @gvprakash @priya_Bshankar @iYogiBabu pic.twitter.com/vUfUcTZaNf